தமிழ் சினிமாவில் நந்தா திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் கருணாஸ். பாடகராக வேண்டும் , இசையமைப்பாளராக வேண்டும் என சென்னையை நோக்கி குருவிக்கரம்பை கிராமத்தில் இருந்து வந்த கருணாஸிற்கு , சென்னை நடிகர் என்ற அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. கருணாஸ் காமெடியனாக நடித்து அசத்தியவர். சிறிது காலத்திற்கு பிறகு அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி , மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக தனது விருப்பத்தை நேர்காணல் ஒன்றிலும் தெரிவித்திருந்தார். கருணாஸ், பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டது நாம் அறிந்த ஒன்றுதான். இவர்களுக்கு ஒரு மகள்  மற்றும் மகன் உள்ளனர். மகன் கென் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். அசுரன் படத்தில் தனுஷ் மகனாக , இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் கென் தனது அப்பாவின் இரு குணங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.


 






 


அதில் ”எங்க வீட்டுல அப்பாதான் ஸ்ட்ரிக்ட். ஸ்கிரீன்ல பாக்குற அப்பா கிடையாது.  நாம சீரியஸா ஒரு விஷயம் பேசினா , டிவியை பார்த்துட்டே இருப்பாரு. நாம சொல்லுற விஷயம் பிடிக்கல அப்படினா டிவி வால்யூமை சத்தமா வைப்பாரு. உடனே நாம அந்த இடத்தை விட்டு கிளம்பிற வேண்டியதுதான். ஆனால் ஜாலி மூட்ல இருந்தா செம ஃபன் பண்ணுவாரு. ஒரு நாள் டோர் பெல் அடிச்சாரு. அம்மா போயிட்டு கதவை திறந்தாங்க. அப்போ உர்ர்னு இருந்தாரு. அப்போ அம்மா சொன்னாங்க. இப்படி கதவை திறந்து வெல்கம் பண்ணா சிரிக்கனும் அப்படினு. சரினு கேட்டுக்கிட்டாரு. அடுத்த நாள் கதவை திறக்கும் பொழுதே சிரிச்சுட்டே நின்னாரு. அதுக்கு  அம்மா கேட்டாங்க.என்னாச்சு கர்ணானு... உடனே நேற்று நீங்க சொன்னீங்கள்ல சிரிச்சுட்டே வரனும்னு அதனாலதானு சொன்னாரு. “ என கருணாஸ் குறித்து பகிர்ந்திருக்கிறார் கென்.