வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்காக காத்திருபவர்கள் 1,692 பேருக்கு ரூ.1¼ கோடி உதவித்தொகை  வழங்கப்படும் என்று தேனிஆட்சியர் அறிவித்துள்ளார்.


 


இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு பதிவு செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருந்தால் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.




இத்திட்டத்தின் கீழ், காலாண்டுக்கு 10-ம் வகுப்பு தோல்வியான கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.600, 10ம் வகுப்பு தேர்ச்சி கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.900, பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,200, பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை பதிவு செய்தவர்களுக்கு ரூ.1,800 என உதவித்தொகை வழங்கப்படுகிறது.


மாற்றுத்திறனாளிகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு கீழான கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு காலாண்டுக்கு ரூ.1,800, பிளஸ்-2 கல்வித்தகுதியை பதிவு செய்தவர்களுக்கு ரூ.2,250, பட்டம் மற்றும் முதுகலை பட்டப்படிப்பை பதிவு செய்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த 5 காலாண்டு கால கட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகையாக மொத்தம் 1,692 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 27 லட்சத்து 32 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை பெற விரும்பும் தகுதியான நபர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.