திரையரங்கில் தான் பார்த்து மறக்க முடியாத முதல் காட்சி குறித்து நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார். 


இது குறித்து நடிகர் கார்த்தி பேசும் போது, “ சின்ன வயசுல முழுக்க முழுக்க ரஜினிசார்தான். பில்லால வர்ற மை நேம் இஸ் பில்லா படம் என்னோட பயங்கர ஃபேவரைட். சின்ன வயசுல அந்தப்பாட்டு எப்ப போட்டாலும், ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து டிவி முன்னாடி வந்து ஆடுவேன். திருப்பூர்ல பாட்ஷா படம் காலையில 6 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன். ஒரு 100 ஆட்டோ இருக்கும்னு நினைக்கிறேன்.




அந்த ரீலை அப்படித்தான் எடுத்துட்டு வந்தாங்க. இரண்டு தியேட்டர்ல அந்தப்படம் ஓடுச்சு. அதனால ரீலை மாத்தி மாத்தி அங்கேயும், இங்கேயும் மாத்தி மாத்தி கொண்டு போயிட்டு இருந்தாங்க. தியேட்டர்ல கூட்டம் அதிகமாயிட்டு. எல்லாரும் நிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நா வேற லாஸ்ட் ரோல டிக்கெட் வாங்கிருந்தேன். அதனால சீட் மேலே நின்னுதான் முழு படத்தையும் பார்த்தேன். அதுதான் என்னால் மறக்கமுடியாத ஃபர்ஸ்ட் ஷோ” என்றார்.


தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம்  இன்று திரையரங்குகளில் வெளியாகியது.


 






காலையிலேயே முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படம் சூப்பராக உள்ளதாகவும், கார்த்தி, அதிதி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.  முன்னதாக படத்துக்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டது.படம் குறிப்பிட்ட சாதி குறித்து எடுக்கப்பட்டுள்ளதற்கு கார்த்தி அப்படி எல்லாம் இல்லை என விளக்கமளித்தார்.


இதேபோல் மதுரை வீரன் பாட்டை ராஜலட்சுமி பாடியிருந்த நிலையில், அதனை நீக்கி விட்டு ஹீரோயின் அதிதியை யுவன் பாட வைத்ததாக எழுந்த சர்ச்சைக்கு ராஜலட்சுமியே முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் படம் பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.