கடந்த வாரம் விருமன் பட ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மதுரையில் உள்ள ராஜா முத்தையா அரங்கத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினரை தாண்டி சூர்யா, சூரி, கர்ணாஸ், ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். விருமன் படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகும் நிலையில், பல அப்டேட்களை ரசிகர்களுக்கு அள்ளி தெறித்து வருகிறது.






விருமன் படத்தை ப்ரொமோஷன் செய்ய, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடக்கும் சிறப்பு நேர்காணலில் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி பங்குபெற்றனர்.சமீபமாக சூர்யா அவர்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அப்போது  சூர்யா சார் அமெரிக்காவில் இருந்தார், நீங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த போது எப்படி ஃபீல் பண்ணீங்க என்று நெறியாளர் கேட்டு முடிப்பதற்குள்ளேயே, 


”விருது கிடைத்தனால் , நான் பெரும் மகிழ்ச்சி அடைந்தேன். படத்தை பார்த்த நான், இந்த படத்துக்கு  அவார்ட் குடுக்கலனா போராட்டம் பண்ணுவேன் என்ற லெவலுக்கு மனசுக்குள்ள நினைச்சிட்டு இருந்தேன். அப்படி பட்ட படம் அது, சூரரைப்போற்று படத்தை பார்த்து அழுதுட்டேன்” என்று கார்த்தி டச்சிங்கான பதிலை அளித்தார்.


2020ஆம் ஆண்டு திரையரங்கம் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியான 30 மொழிகளைச் சேர்ந்த சுமார் 305 திரைப்படங்கள் 68ஆவது தேசிய விருக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டன. இந்த 305 படங்களில் சிறந்த படமாக ’சூரரைப் போற்று’ படம் தேர்வாகி சாதனை படைத்தது.






சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். ஹிந்தி சூரரைப்போற்று  படத்தில் நடிகர் சூர்யாவும், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இருவரையும் ஒரே திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.