இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உடுமலையில் 75 பள்ளிகளில் 75 அறிவியல் சோதனைகள் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சிறப்புப் பரிசு வழங்கப்பட உள்ளது.


இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களை நினைவுகூரும் விதமாகவும், பள்ளி/ கல்லூரி மாணவர்களிடையே நாட்டுப் பற்று உணர்வினை ஏற்படுத்துவதற்காகவும் உடுமலையில் உள்ள தன்னார்வ அமைப்புகள் இணைந்து 75 இடங்களில் 75 நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளன. 


இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனத்தோடு இணைக்கப்பட்ட கலிலியோ அறிவியல் கழகம், உடுமலை சுற்றுச்சூழல் சங்கம் மற்றும் ஶ்ரீ ஜிவிஜி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து  பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு 75 பள்ளிகள், 75 மாணவர்கள், 75 அறிவியல் பரிசோதனைகள், 75 நிமிடங்கள் என்ற தலைப்பில் ஒரே நேரத்தில் 75 அறிவியல் பரிசோதனைகளை செய்யும் நிகழ்வானது வரும் சுதந்திர தினத்தன்று நடத்த திட்டமிட்டுள்ளது.


பங்கேற்கும் அனைவருக்கும் சிறப்புப் பரிசு


பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அரசின் சான்றிதழும் சிறப்புப் பரிசும் வழங்கப்படும். மேலும் ஆகஸ்ட் 8 முதல்இரவு வான் நோக்கும் நிகழ்ச்சியானது உடுமலை தேஜஸ் மஹாலில் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




ஆகஸ்ட் 8 முதல் 15ஆம் தேதி வரை  சுதந்திர இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்திய விஞ்ஞானிகள் பற்றிய அறிவியல் படக் கண்காட்சியும், விடுதலைப் போராட்டத்திற்காக பாடுபட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களைப் பற்றிய பட கண்காட்சியும் உடுமலை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மகாலில் நடைபெற உள்ளது. 
 
மேலும் பள்ளி/ கல்லூரி மாணாக்கர்களுக்கு கீழ்க்காணும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


கட்டுரைப் போட்டி


’இந்தியாவை 2047-இல் வல்லரசாக்க என் பங்கு’ என்ற தலைப்பிலும், 


ஓவியப் போட்டி 


’கனவு இந்தியா 2047’ என்ற தலைப்பிலும்


முழக்கம் (ஸ்லோகன்) எழுதுதல் போட்டி 


’2047-ல் இந்தியாவை வல்லரசாக்க என் முழக்கம்’ என்ற தலைப்பிலும்


நாளை (ஆகஸ்ட் 10ஆம் தேதி) மாலை 2 மணி அளவில் உடுமலை தளிரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் நடைபெற உள்ளது. மேற்காண் போட்டிகளிலும் நிகழ்வுகளிலும் பங்கேற்க விரும்பும் மாணவர்களும் பொதுமக்களும் கீழ்காணும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்கலாம்.


போட்டிகள் பற்றிய தகவல்களுக்கு- கண்ணபிரான், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: 8778201926 


இ-மெயில்: udt75eventsceleb@gmail.com


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர