கோலிவுட் சினிமா கெரியரில் தனக்கென ஒரு சில கட்டுப்பாடுகளை வறையறுத்து அப்படியாகவே வாழ்ந்து காட்டியவர் நடிகர் சிவக்குமார். இவரின் மகன்கள்தான் சூர்யாவும் கார்த்தியும் . மேலும் இவருக்கு பிருந்தா என்ற மகளும் இருக்கிறார். சிவக்குமார் ஒரு தீவிர முருக பக்தர் . அதனால்தான் தன் மகன்கள் இருவருக்கும் முருக கடவுளின் மறுபெயர்களான சரவணன் , கார்த்தி என வைத்தார். ஆனால் சூர்யா படத்திற்காக தனது பெயரை மாற்ற வேண்டியதாயிற்று. சூர்யா சிவக்குமாரின் கொள்கைக்கு எதிராக காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆரம்பத்தில் சூர்யாவின் காதலை எதிர்த்த சிவக்குமார் பின்னர் ஏற்றுக்கொண்டார். சூர்யா-ஜோதிகா தம்பதிகளுக்கு தியா , தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
தாய் சொல் தட்டாத பிள்ளை :
முதல் மகன்தான் தனது விருப்பத்திற்கு திருமணம் செய்துவிட்டார். இரண்டாவது மகனையாவது தங்கள் விருப்பப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டிருக்கின்றனர் சிவக்குமார் தம்பதிகள். குறிப்பாக அது சிவக்குமாரின் மனைவி ஆசையாக இருந்திருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்பவரை பெற்றோரின் விருப்பப்படி திருமணம் செய்துக்கொண்டார் கார்த்தி. இந்த தம்பதிகளுக்கு 2013 ஆம் ஆண்டு உமையாள் என்ற மகள் பிறந்திருந்தார்.ஒரு மகள் போதும் என நினைத்த கார்த்திக்கு சில சம்பவங்கள்தான் அடுத்து ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ள இதுதான் காரணம் :
இது குறித்து விருமண் புரொமோஷன் விழாவில் பகிர்ந்த கார்த்தி “ ஒருமுறை எனக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் என் தங்கை பிருந்தா , அவளது குழந்தைகளை கூட பார்க்காமல் . நாள் முழுக்க என் குழந்தையை வந்து பார்த்துக்கொண்டாள் . அதே போல என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை .நான் உமையாளை பள்ளி அழைத்துச்செல்ல வேண்டிய சூழல் . உடனே என் மனைவியின் தம்பி வந்து அவளை பார்த்துக்கொண்டான். அப்போது அவனுக்கு இரண்டு வாரத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.அப்போதுதான் எனக்கு புரிந்தது என் அண்ணனும் , தங்கை பிருந்தாவும் எனக்கு எப்படி பக்க பலமாக எல்லா சூழலிலும் இருக்கிறார்களோ . அதே போலத்தான் என் குழந்தைக்கு ஒரு துணை வேண்டும் என முடிவு செய்தேன். அதன் பிறகுதான் கந்தன் பிறந்தார்.” என்றார். கந்தன் என்பது முருக கடவுளுக்கான வேறு பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.