திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் திலகபாமா பழனியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, மத்திய அரசின் திட்டங்களை எடுத்து கூறி பிரச்சாரத்தை தொடங்கினார். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும் குதிரை வண்டி இயக்கியும் வாக்கு சேகரித்தார்.

Continues below advertisement

Mayiladuthurai Leopard: மீண்டும் ஒரு ஆடு காலி.. மயிலாடுதுறையில் வனத்துறைக்கு 4வது நாளாக ஆட்டம் காட்டும் சிறுத்தை!

Continues below advertisement

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க கூட்டணியின் பாமக வேட்பாளர் திலகபாமா இன்று காலை பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேவர் சிலை, பேருந்து நிலையம், பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, நெய்காரபட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முதலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் பிரச்சாரத்தை துவங்கினர். அப்போது பேசிய திலகபாமா, மத்திய அரசின் பிரதமர் மந்திரி காப்பீட்டு திட்டத்தை திமுக அரசு கலைஞர் காப்பீட்டு திட்டம் என மாற்றி வருவதாகவும்  ,

Pugazhenthi MLA: விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ., புகழேந்தி மரணம்.. அமைச்சர் பொன்முடி கண்ணீர் மல்க அஞ்சலி

சாராயக்கடையை திறக்க முயற்சிப்பவர்களை துரத்தி விட வேண்டும் எனவும், பழனி அடிவாரப் பகுதியில் கிரிவல பாதையில் சாலையோர கடைகள் அகற்றப்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகளுக்கு எந்த ஒரு மாற்று ஏற்பாடுகளை செய்யப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சாமானியர்களுக்கு பிரச்சனை என்றால் கம்யூனிஸ்ட் ஓடி வருவார்கள். ஆனால், இப்போது இருக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள் வேற மாதிரி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

ATM Theft: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை; ரூ.10 லட்ரூசமா? எப்படி? - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

நேற்று விடுதியில் மேற்கூரை இடிந்து விழுந்து மாணவிகள் காயம் அடைந்துள்ளனர். கட்டிடங்கள் கட்டுவது திமுக அரசு ஊழல் செய்துள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பேசினார். மக்களுக்கான திட்டங்களை செய்யாதவர்களை தூக்கி எறிந்து விட்டு எப்போதும் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று பாமக பாஜக கூட்டணி தான் என்றும் தெரிவித்து பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார்.  திண்டுக்கல் தொகுதியை நாலு அமைச்சர்களை தூக்கி எரிந்து விட்டு மாம்பலம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டு கொண்டார். தொடர்ந்து அடிவாரம் பகுதிகளில் கடைகள் பிரச்சாரம் மேற்கொண்டு பஞ்சாமிர்த விற்பனை செய்யும் கடைகளில் பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் விற்பனை செய்தும் குதிரை வண்டியை இயக்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.