தமிழ் சினிமாவில் இது வில்லன்களுக்கான பொற்காலம் என்றே சொல்லலாம். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு ஹீரோவுக்கு நிகராக வில்லனுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் காரணத்தினாலே  ஹீரோவாக நடிப்பதைவிட வில்லனாக நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்கள்  பிரபல நடிகர்கள். இதற்காக ஒரு பெரிய தொகையையும் சம்பளமாக பெறுகிறார்கள். அண்மையில் இந்தியாவில் வில்லன் கதாபாத்திற்காக அதிக சம்பளம் பெற்ற நடிகரின் பெயர் வெளியிடப்பட்டது. அது ஒரு தமிழ் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.


கமலஹாசன்


அந்த நடிகர் வேறு யாரும் இல்லை . உலக நாயகன் கமல்ஹாசன் தான். பிரபாஸ் நடிப்பில் உருவாக இருக்கும் பிராஜெக்ட் கே என்கிற  படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தின் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் தீபிகா படூகோன், அமிதாப் பச்சன் முதலியவர்கள் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.


அண்மையில் இந்தப் படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உறுதிப்படுத்தப்பட்டன. தற்போது கமல்ஹாசன் இந்தப் படத்தின் முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சுமார் 25 கோடி ரூபாய் அவர் சம்பளமாக பெற்றிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கின்றன. இந்திய சினிமாவில்  வில்லன் காதாபாத்திரத்திற்காக  ஒரு நடிகர் பெறும் அதிகபட்சம் சம்பளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


விஜய் சேதுபதி


கமல்ஹாசனுக்கு முன்பு இந்திய இந்த இடத்தை பிடித்திருந்தவர் விஜய் சேதுபதி. அட்லீ இயக்கியிருக்கும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இதற்காக 21 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறாராம். முந்தையதாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படத்திலும் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. இதற்காக அவர் 15 கோடி சம்பளமாக பெற்றார் என்று கூறப்பட்டது.


 ஃபஹத் ஃபாசில்


இவர்களைத் தவிர்த்து பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் படத்தில் ராவணனாக நடித்த சைஃப் அலி கான் 10 கோடியும், டைகர் 3 படத்தில் வில்லனாக நடித்த இம்ரான் ஹஸ்மி 10 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்கள். மாமன்னன் படத்தில் வில்லனாக நடித்த ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்துவரும் மற்றொரு படம் புஷ்பா 2 .  இதற்காக 6 கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர்த்து தமிழ் சினிமாவில் என்றென்றைக்குமான வில்லன் பிரகாஷ் ராஜ் ஒரு படத்திற்கு 1 முதல் 1.5 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார் என சொல்லப்படுகிறது. .