இசையமைப்பாளர் இளையராஜா இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், விக்ரம் பட ப்ரமோஷனில் ஈடுபட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் முன்னதாக ஸ்பாடிஃபை நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் இளையராஜா குறித்த சுவாரஸ்யத் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை இருவரது ரசிகர்களும் சிலாகித்து பகிர்ந்து வருகின்றனர்.


இசையமைக்க சொன்ன ராஜா!


 ”இளையராஜா ஒரு முறை இசையமைக்க கற்றுத் தருகிறேன், கற்றுக் கொள்ளுங்கள் என என்னிடம் கேட்டார். உடனே ”என்னை அவமானப்படுத்த நினைச்சு இருக்கீங்ககளா? உங்களை என் அண்ணனா நினைச்சு இருந்தேன். இப்படி துரோகம் பண்றீங்களே” அப்படினு சொன்னேன். இசையில் என்னை விட அதிகம் தெரிந்த இளைஞர்கள் இசையமைப்பாளராக வர முயன்று வருகின்றனர். அவங்க கிட்ட அதை விட்றனும்" என கமல் தெரிவித்துள்ளார்.


 



திரைத்துறையில் இசை அனுபவம்


மேலும் பிரபல பாடகர் பாலமுரளி கிருஷ்ணாவிடம் தான் இசை கற்ற பயணம் குறித்தும் பகிர்ந்துள்ள கமல், 
ஐந்து வயதில் தொடங்கிய தன் நடிப்பு பயணம், அதன் மூலம் தான் இசை பற்றி அறிந்து கொண்டவை, தன்னுடன் பயணித்த இசையமைப்பாளர்கள், நடன இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம், பாடல் எழுதிய அனுபவம், பாடகராக உருமாறியது என இசைத்துறை சார்ந்த தன் பல அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.


 



விக்ரமில் பிடிச்ச பாட்டு...


மேலும் விக்ரம் படத்தில் பிடித்த பாடல் குறித்த கேள்விக்கு ”ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்பதால் ’பத்தல, பத்தல’ பாடலை சொல்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.


விக்ரம் படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸாக உள்ளது. தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் சிறப்பான ப்ரமோஷன் பணிகளில் இப்படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 


லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், சூர்யா, விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.


இதையும் படிங்க: ரஜினி - லோகேஷ் கூட்டணி எப்போது? விக்ரம் படக்குழுவினர் ரஜினிகாந்துடன் நேரில் சந்திப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண