கன்னட மொழி குறித்து கமல்
தக் லைஃப் இசை வெளியீட்டி நிக்ழ்ச்சியில் கன்னட மொழி பற்றிய கமலின் கருத்து கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சென்னையில் நடந்த தக் லைஃப் இசை நிகழ்ச்சியில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் கலந்துகொண்டார். அவரை வரவேற்கும் விதமாக கமல் தனது பேச்சைத் தொடங்கினார். 'உயிரே , உறவே , தமிழே என்று என் பேச்சை தொடங்கினேன். இங்கு வந்திருக்கும் ஷிவராஜ்குமார் என் குடும்பம்தான் . உங்களுடைய கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததுதான்." என கமல் தெரிவித்தார்.
தக் லைஃப் படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு
கமலின் கருத்து சமூக வலைதளங்களில் தொடங்கி கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பிடம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. கன்னட மொழியையும் கலாச்சாரத்தையும் கமல் அவமதிக்கும் விதமாக பேசியதாகவும் இந்த அமைப்பு கருதுகிறது. கன்னட மொழியை அவமதிக்கும் விதமாக பேசினார் கமலின் படங்கள் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என அமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டது.
தக் லைஃப் படத்தின் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு அந்த படத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதே நேரம் கமல் தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என கோரிக்கை வலுத்தது. அதே நேரம் பெங்களூரில் கமல் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷனுக்கு செல்ல இருந்த இடத்தில் போராட்டக் காரர்கள் ஒன்று கூடி கமல் மீது கருப்பு மை வீச திட்டமிட்டிருந்தார்கள். இதனால் கமல் இந்த நிகழ்வை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
கமலை விமர்சித்த சித்தராமையா
கமலின் கருத்து தொடர்பாக கன்னட முதலமைச்சர் சித்தராமையா தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் " கன்னட மொழிக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. கமல் வரலாறு தெரியாமல் பேசுகிறார்" என சித்தராமையா பத்திரிகையாளர்களிடன் தெரிவித்தார்.