ABP Nadu Impact Makers Conclave: ஏபிபி நாடு சார்பில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும், இம்பேக்ட் மேகர்ஸ் மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் மனோ தங்கராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

ABP நெட்வர்க்கின் முன்னெடுப்பு:

நூற்றாண்டை கடந்த செய்தி நிறுவனமான ஏபிபி நெட்வர்க்கை சேர்ந்த ABP நாடு, தமிழ்நாட்டின் முன்னணி டிஜிட்டல் செய்தி தளங்களில் ஒன்றாக சுறுசுறுப்பாக  இயங்கி வருகிறது. அரசியல், கல்வி, சினிமா, விளையாட்டு மற்றும் ஆட்டோமொபைல் என அனைத்து பிரிவுகளிலும் பரபரப்பிற்கு பஞ்சமின்றி செய்திகளை வெளியிடுவதோடு, மக்களுக்கான அத்தியாவசிய தகவல்களையும் சுவாரஸ்யமாக வழங்கி வருகிறது. செய்தி நிறுவனம் என்பதை தாண்டி தேசப்பற்று கொண்டு சதர்ன் ரைசிங் மாநாடு, இந்தியா@2047 மாநாடு, ஐடியாஸ் ஆஃப் இந்தியா என, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை விவாதிப்பதற்கான களங்களையும் அமைத்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது, ABP நாடு IMPACT MAKERS CONCLAVE  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ABP நாடு இம்பேக்ட் மேகர்ஸ் மாநாடு:

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தென்மாநிலங்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்து சதர்ன் ரைசிங் மாநாட்டில் விரிவாக விவாதித்து தேசிய அளவில் கவனம் ஈர்த்தோம். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் எப்படி தடம் பதித்து முன்னோக்கி பயணிக்கிறது? தேசிய வளர்ச்சியில் நமது மாநிலத்தின் பங்களிப்பு என்ன? என்பதை விவாதிக்க ABP நாடு IMPACT MAKERS CONCLAVE நடைபெற உள்ளது. சென்னையில் உள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலில் நாளை (மே.30) இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் அரசியல், விளையாட்டு, சினிமா, தொழில்துறை என பல்வேறு பிரிவுகளை சேர்ந்த சாதனை தமிழர்கள் பங்கேற்று, தேசிய அளவில் தமிழ்நாட்டின் தாக்கம் குறித்து தங்களது எண்ணங்களை பகிர உள்ளனர்.

ABP நாடு இம்பேக்ட் மேகர்ஸ் மாநாடு - நிகழ்ச்சி நிரல்

  • தங்கம் தென்னரசு, தமிழ்நாடு நிதியமைச்சர் - பட்ஜெட்டை தாண்டி: வலுவான தமிழ்நாட்டிற்கான நிதி திட்டங்கள் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • சவுண்ட்ஸ் ஆஃப் சங்கம்: தமிழ் இசையின் அடையாளத்தை மீண்டும் கண்டறிதல் - என்ற தலைப்பில் பழங்கால தமிழ் வாத்தியங்களோடு உரு பானர்களின் இசை குழுவின் நிகழ்ச்சி
  • மனோ தங்கராஜ், பால்வள அமைச்சர் -  பால், சந்தை மற்றும் நவீனத்துவம்: ஒருங்கிணைந்த நிர்வாகத்தின் மூலம் கிராமப்புற தமிழ்நாட்டை மீண்டும் உருவாக்குதல் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • மூர்த்தி, தொழில்நுட்ப இயக்குனர், ARS ஸ்டீல் & WS ஹபீப், தலைவர், CREDAI TN -  வளர்ச்சிக்கான திட்டத்தை எளிதாக்குதல்: கொள்கை மாற்றம் மூலம் நிலையான கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளனர்
  • டாக்டர் ஸ்ரீமதி கேஷன், CEO, Space Kidz - வகுப்பறைகளில் விண்வெளி:அடுத்த தலைமுறை விஞ்ஞானிகளை வளர்ப்பது என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • கமாலினி குணாளன், கிரிக்கெட் வீராங்கனை - இலக்கை நோக்கிய பந்துவீச்சு: மகளிர் கிரிக்கெட்டில் பெண்களி சக்தி என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • சரண்யா துரதி, நடிகை - வரலாற்றில் கதாநாயகிகள்:  கடந்த காலத்தை நிகழ்த்துதல் மற்றும்  எதிர்காலத்தை வடிவமைத்தல் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • ஆர். பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்., ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் - சிந்து நதியிலிருந்து வைகை வரை:  காலம், மண் மற்றும் ஆன்மா வழியாக ஒரு பயணம் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்.
  • சாய் அபயங்கர், இசையமைப்பாளர், பாடகர் - புதிய இந்தியாவின் நோட்ஸ்: இசை மூலம்  மனதையும் இதயத்தையும் நகர்த்துதல் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • பார்த்திபன் குமரவேல், அரசியல் ஆலோசகர், எழுத்தாளர் - டிஜிட்டல் யுகத்தில் மாறும் தேர்தல்களின் இயக்கவியல் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்
  • விஜய் சங்கர், இந்திய கிரிக்கெட் வீரர் - தமிழ்நாட்டு உற்சாகத்துடன் பேட்டிங்: ஒழுக்கம், கனவுகள் மற்றும்  வெற்றிக்கான உந்துதல் என்ற தலைப்பில் விவாதிக்க உள்ளார்