திரைத்துறையில் பிரபலங்களின் வாரிசுகள் நடிகர்களாக என்ட்ரி கொடுப்பது என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒரு வழக்கம்தான். ஆனால் அப்படி வந்த அனைவரும் ஜெயித்துவிடுவது கிடையாது. ஆனால் தன்னுடைய தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியால் சில்வர் ஸ்பூன் கையோடு பிறந்து சில்வர் ஸ்க்ரீனிலும் சாதித்த ஜாலியான ஹீரோ ஜீவா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் தரமான திரைப்படங்களை கொடுத்துள்ள சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரியின் இளைய மகன் ஜீவா ஒரு சிறந்த நடிகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஜீவா பற்றி சில அறியாத தகவல்களை அவரின் பிறந்தநாள் அன்று தெரிந்து கொள்ளலாம்.
அமீர் இயக்கத்தில் 2005ம் ஆண்டு வெளியான 'ராம்' திரைப்படத்தில் ஜீவாவின் அபாரமான நடிப்பு பாராட்டுகளை குவித்தது. இப்படத்திற்காக அவருக்கு சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்குப் பிறகு இந்த விருதை பெற்ற தமிழ் நடிகர் ஜீவா தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜீவா ஒரு சிறந்த நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருந்தாலும் அவர் ஒரு தீவிரமான கிரிக்கெட் பிரியர். அந்த வகையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2021ம் ஆண்டு வெளியான '83' படத்தில் நடித்ததன் மூலம் அவரின் கனவை நினைவாக்கி கொண்டார். இப்படம் மூலம் ஒரு பான் இந்தியன் ஆர்ட்டிஸ்ட் என்ற பெருமையையும் பெற்றார் நடிகர் ஜீவா.
திரைத்துறையை பொறுத்த வரையில் அவர் ஜீவா என்ற அழைக்கப்படுகிறார். ஆனால் உண்மையில் அவரின் இயற்பெயர் அமர் சௌத்ரி.
ஜீவா ஒரு நன்கு அறியப்பட்ட பிரபலம். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் ஜீவாவை 883K பாலோவர்ஸ் பின்தொடர்கிறார்கள். என்றுமே அவர் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவான 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவராக இருந்துள்ளார். அவருடன் சேர்ந்து நடிகை சங்கீதா மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடுவர்களாக இருந்தார்கள். மேலும் ஆஸ்ட்ரோவின் யுத்த மீடியா ஆல்-ஸ்டார்ஸ் கிராண்ட் பைனலில் நடுவராகவும் ஜீவா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் நடிகர் ஜீவா என்ட்ரி கொடுப்பதற்கு முன்னர் சில வருடங்கள் குங்-ஃபூ பயிற்சி எடுத்துள்ளார். 2012ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'முகமூடி' படத்தில் ஒரு சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீண்டும் ஒய்.எம்.சி.ஏவில் சிறப்புப் பயிற்சி எடுத்து கொண்டார்.
சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக கேப்ரியல்லா வில்கின்ஸ் டிசைன் செய்த காஸ்டியூமை நடிகர் ஜீவா அணிந்து இருந்தார். அந்த காஸ்டியூம் எடை 10 கிலோவுக்கும் மேல் இருந்ததாம்.