பார்ப்பதற்கு அச்சு அசலாக நடிகர் செந்தில் போலவே இருக்க கூடியவர்தான் காமெடி நடிகர் ஜெயமணி . சினிமாவில் முக்கியமான காமெடி நடிகர்களுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் அந்தஸ்து கொடுக்குறார்களோ. அந்த அளவிற்கு துணை நடிகர்களுக்கும் மக்கள் அங்கீகாரம் கொடுக்க தவறுவதில்லை. அந்த வகையில் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த ஜெயமணி . சினிமாவிற்குள் எதர்ச்சையாக நுழைந்தவர். இதுவரையில் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1994 ஆம் ஆண்டு அறிமுகமான ஜெயமணி , 1995 ஆம் ஆண்டு வெளியான லக்கி மேன் திரைப்படம் இவருக்கான அங்கீகரத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஜெயமணி சினிமாவின் ஆரம்ப நாட்களில்  நிறைய அவமானங்களை சந்திருக்கிறார் அதிகுறித்து நேர்காணல் ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார்





அதில் ” சினிவாவுல நுழைய விதி வேண்டும்னு சொல்லுவாங்க. மதுரை தியாகராஜா காலேஜ்ல பி.எஸ்.சி படித்தேன். அதன் பிறகு தமிழக அரசு வேலைக்குதான் வந்தேன். கம்பன் வீட்டு கட்டுத்தரையும் கவிபாடும்னு ஒரு பழமொழி இருக்கிறதல்லவா , அதை போலத்தான் எங்கள் உறவினர்கள் அனைவரும் மதுரையில் வள்ளி திருமணம் , அரிச்சந்திரா உள்ளிட்ட நாடகங்களை போடுவார்கள்.இன்றைக்கு அதை தொழிலாகவே செய்து வருகின்றனர். சின்ன வயதில் எனக்கு நடிக்க ஆர்வமில்லை. ஆனால் விடிய விடிய திருவிழாவில் போடும் நாடகத்தை பார்த்துக்கொண்டிருப்பேன். நான் அப்போது சினிமாவிற்கெல்லாம் வருவேன் என நினைக்கவில்லை. அதன் பிறகு மதுரை கோ- ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சீனியர் அசிஸ்டெண்டாக வேலை கிடைத்தது. என் மனைவிக்கு சென்னையில் வேலை கிடைத்தது. 1981 ஆம் ஆண்டு இங்க வந்தோம். 1993 ஆம் ஆண்டு ஒருதலை கிருஷ்ணராவ் என்னும் காமெடி நடிகருடைய அறிமுகம் கிடைத்தது. அவர் என்னை பார்த்துவிட்டு என்னையா பார்ப்பதற்கு அப்படியே நடிகர் செந்தில் போலவே இருக்கிறாய் என்றார். அந்த சமயத்தில் கவுண்டமணி செந்தில் பீக்கில் இருந்தார்கள் . ஒருமுறை என்னிடம் நடிக்கிறீர்களா என கேட்டார். சரி என்றதும், காமெடி நடிகர் வீரப்பனிடம் அழைத்து சென்றார். முதன் முதலாக பி.வாசு இயக்கத்தில் வெளியான சாது என்னும் படத்தில் கவுண்டமணியுடன் நடித்தேன். 250 படங்களுக்கு மேலாக நடித்திருக்கிறேன். ஆரம்பத்தில் நடிக்க வந்த சமயத்தில் நான் தட்டை நீட்டிக்கொண்டு சாப்பிட நின்றபொழுது , அதனை புரடக்‌ஷனில் பிடிங்கிக்கொண்டு அவங்களோட போய் சாப்பிடுயா என அவனமான படுத்தியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஒரு அரசு அதிகாரியாக கை நீட்டி சம்பளம் வாங்கினோமே இன்றைக்கு இப்படி அவமானப்படுத்துறாங்களேன்னு வேதனையா இருந்துச்சு “ என மனம் பேசியிருக்கிறார் ஜெயமணி.