ஜெயம் ரவி
ஜெயம் படத்தில் தொடங்கி பல ஃபேமிலி கமர்சியல் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி நடித்த பொன்னியின் செல்வன் படம் பெரியளவில் வெற்றியும் பாராட்டுக்களையும் கொடுத்தது. ஆனால் அதற்குபின் ஜெயம் ரவி சோலோவாக நடித்த எந்த படமும் பெரிய ஹிட் அடிக்கவில்லை. இறைவன் , சைரன் , சமீபத்தில் வெளியான பிரதர் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் எந்த வித தாக்கமும் இல்லாமல் சென்றுவிட்டன. அடுத்தபடியாக கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள காதலிக்க நேரமில்லை படத்தை ரசிகர்கள் நம்பி இருக்கிறார்கள்.
ஆர்த்தியுடன் விவாகரத்து
இதற்கிடையில் தனது மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்தார். ஆர்த்தி ஜெயம் ரவி என இரு தரப்பினர் மீதும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பேசப்பட்டன. ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் காட்டுத்தீப்போல் பரவியது. மேலும் ஆர்த்தியின் கொடுமை தாங்காமல் தான் ஜெயம் ரவி இந்த திருமண உறவை முடித்துக் கொண்டார் என்று கூறப்பட்டது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜெயம் ரவி இந்தியில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின இதை அவரும் உறுதிபடுத்தினார். தமிழில் ஜெயம் ரவி நடிக்கவிருக்கும் ஒரு ஸ்பெஷல் படம் பற்றியும் அப்டேட் கொடுத்திருக்கிறார்.
வெற்றிமாறன் கதையில் ஜெயம் ரவி
" ரொம்ப தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒரு நாள் வெற்றிமாறன் ஆபிஸ் போனேன். கதை இருந்தால் சேர்ந்து பணியாற்றுவோம் என்று சொன்னேன். அவர் தான் எடுக்க வேண்டிய படத்திற்கு ஒரு லிஸ்ட் போட்டார். இதெல்லாம் முடித்துவிட்டு பார்க்கலாம் என்று சொன்னார். கூடிய விரைவில் வெற்றிமாறனின் கதை ஒன்றை கேட்க இருக்கிறேன். இதுபற்றி தயாரிப்பாளர் எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அந்த கதையை கேட்க நான் ஆவலாக காத்திருக்கிறேன்" என ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் , கெளதம் மேனன் இப்படத்தை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.