அண்மையில் பிரபல பத்திரிகை ஒன்றின் பிரஸ்மீட்டில் நடிகர் ஜெயம்ரவி கலந்துகொண்டார். வழக்கமாக ஆடியன்ஸில் இருந்து கேள்விகள் வராமல் இந்த முறை ஸ்டேட் விட்டு ஸ்டேட் கடந்து ஒருவரிடமிருந்து அவருக்கு கேள்வி காத்திருந்தது. வீடியோ மூலம் அந்த கேள்வியை கேட்டவர் நடிகர் நதியா. ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரவிக்கு அம்மாவாக நடித்தவர். தற்போது கூட அண்டே சுந்தரானிக்கி என்கிற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். எம்.குமரன் படம் நதியாவுக்கு சினிமா உலகில் செகண்ட் இன்னிங்ஸ். நதியா ரவியிடம் கேட்ட கேள்வி இதுதான்,’சினிமாவில் ஒரு மாற்றம் வேண்டுமென்றால் என்ன எதிர்பார்ப்பிங்க?’ என்று கேட்டார் அவர்.






அதற்கு பதிலளித்த ரவி,’நதியா எப்பவுமே தன்னை ஹேப்பியா வைச்சுப்பாங்க.அதனால்தான் அன்றைக்கு இருந்ததுபோலவே இன்றைக்கும் இருக்காங்க. இப்பவும் பார்க்க எனக்கு தங்கச்சி மாதிரிதான் இருக்காங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லனும்னா, சினிமாவில் நிறைய பெண் இயக்குநர்கள் உருவாக வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.சுதா கொங்கரா மாதிரியான இயக்குநர்கள் இங்கே நிறைய தடம் பதித்திருக்கிறார்கள். என்னுடைய திரைப்படத்திலும் நிறைய பெண் துணை இயக்குநர்கள் பணியாற்றி பார்த்திருக்கிறேன். வரவேற்க வேண்டிய விஷயம். நான் இங்கே எம்பவர்மெண்ட் பற்றி பேசவில்லை.அதெல்லாம் தொடர்ச்சியா நடந்துட்டு இருக்கு.ஆனால் ஒரு பெண்ணைப் பற்றி பெண்ணின் பார்வையில் சினிமாவில் பேச வேண்டும், ஒரு பெண் இயக்குநர் தனது பார்வையில் சினிமா கதாப்பாத்திரங்களை உருவாக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்’ என்றார்.


இயக்குநர் மணிரத்னத்தின் பிரம்மாண்டப் படைப்பான பொன்னியின் செல்வனில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.