Siren: விஜயின் த.வெ.க., கட்சிக்கு ஆதரவா..? - ஜெயம் ரவியின் நறுக் பதில்

நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டால் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது என்றும் தெரிவித்தார்

Continues below advertisement

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய் குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”.  நேற்று பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி மதுரையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை நடிகர் ஜெயம் ரவி  மதுரையில் உள்ள சினிப்ரியா தியேட்டரில் ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்தார். 

Continues below advertisement

actor jeyam ravi talks about actor samuthirakani at siren press meet Siren: என்ன இப்படி ஆக்கிட்டீங்களே.. சைரன் பட செட்டில் புலம்பிய சமுத்திரக்கனி: போட்டுடைத்த ஜெயம் ரவி!

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மதுரைக்கு வந்தேன். மதுரை ரசிகர் உடன் சேர்ந்து படம் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசிகர்கள் கைதட்டி மகிழ்வதை பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.  இது இயக்குநர் ஆண்டனி பாக்யராஜின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. சைரன் படத்திற்கு அனைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிக திருப்தியான உணர்வை அளிக்கிறது” என கூறினார். 


 

நடிகர் சங்க கட்டடம் எப்போது கட்டி முடிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நிச்சயமாக விரைவில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் அதற்கான பணியில் தீவிரமாக திரையுலக நண்பர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறினார்.

தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு விஜயகாந்தின் பெயர் வைக்கப்படுமா என கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என கூறினார். 

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, தன்னுடைய வட்டம் குறுகிய வட்டம் சினிமா அவ்வளவு தான், எனக்கு தெரிந்தது.

நடிகர் விஜய் அழைப்பு விடுத்தால் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு விஜய் அண்ணன் அழைப்பு விடுத்தால் வீட்டுக்கு வேண்டுமென்றால் சென்று வரலாம் எனவும் கூறினார். 

தொடர்ந்து, நடிகர் விஜய் அரசியல் பயணத்திற்காக திரையுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டால் அவரின் இடத்தை பூர்த்தி செய்ய யாராலும் முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Siren Ott Release: ஜெயம் ரவி - கீர்த்தி சுரேஷின் சைரன் படத்தைக் கைப்பற்றிய ஓடிடி நிறுவனம்: இத்தனை கோடிகளா!

Continues below advertisement
Sponsored Links by Taboola