நடிகர் ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர் இணைந்து நடிக்கும் புதுப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இது ஜெயம் ரவியின் 28-வது திரைப்படம். மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கல்யாண கிருஷ்ணன் இந்த படத்தை இயக்குகிறார். 2015-ஆம் ஆண்டு, பூலோகம் படத்தை இயக்கிய இவர், இரண்டாவது முறையாக ஜெயம் ரவியை வைத்து படம் இயக்குகிறார்.
இன்று, ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் என்பதால், புதுப்பட தொடக்க நிகழ்ச்சி இன்று நடந்ததுள்ளது. நடிகை ப்ரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் ஜெயம் ரவிக்கு வாழ்த்துகள் தெரிவித்து பதிவிட்டுள்ளனர். பூலோகம் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை அடுத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் இந்த கூட்டணி மீது பெரும் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. கல்யாண கிருஷ்ணன் - ஜெயம் ரவி இணையும் திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
கடைசியாக ஜெயம் ரவிக்கு, பூமி திரைப்படம் ஓடிடி ஹாட்ஸ்ட்டாரில் வெளியானது. இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் அப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கலமிறங்கியுக்கும் வித்தியாச கதைகளம் கொண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார். அருள்மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் பின்னாட்களில் ராஜா ராஜா சோழன். இரு பாகங்களாக வெளியாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. படத்திலிருந்து ஒருவர் பின் ஒருவராக தங்களது பகுதிகள் நிறைவடைந்ததும் ஊருக்கு திரும்புகின்றனர்.
திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்தில் நடிக்கும் ஜெயம் ரவி தனது காட்சிகள் முடிந்து மத்திய பிரதேசத்தில் இருந்து சமீபத்தில் ஊருக்கு திரும்பியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய்? விவசாயிகளுக்காக அரசை எதிர்க்கும் ஹீரோ கதையா?