Actor Jai: கிறிஸ்துமஸ் கேக் மிக்ஸிங் விழா... தொடங்கி வைத்த நடிகர் ஜெய்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5 ஆம் வருட கேக் மிக்ஸிங் செரிமனி நடைபெற்றது.

Continues below advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போது தயாரிக்கப்படும் விற்பனைக்கு வரும் பாரம்பரியம் மிக்க 'ரிச் பிளம் கேக்' உலகளவில் பிரபலமானது.

Continues below advertisement

கேக் மிக்ஸிங் விழா

இந்நிலையில், சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5 ஆம் வருட கேக் மிக்ஸிங் செரிமனி நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குநர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சேர்மன் ரமேஷ் குமார், நிர்வாக இயக்குனர் குழந்தையன், துணை தலைவர் சந்திரசேகர், கார்பரேட் எஸ்.எம்.பி. இயக்குனர் தேவேந்திரன்  உள்ளிட்ட பார்க் எலன்சா ஓட்டல் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

ஜெய்யின் அடுத்தடுத்த ப்ராஜெக்டுகள்

ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படம், மற்றும் சீரிஸ் வெளியாக இருக்கிறது. நடிகை நயன்தாரா நடித்து மாபெரும் ஹிட் அடித்த அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் கருப்பர் நகரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். வட சென்னையை மையப்படுத்தி இக்கதை  அமைந்துள்ள நிலையில், தற்போது ரீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதேபோல், ஜெய் நடித்துள்ள லேபிள் சீரிஸ் நாளை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. பிரபல இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். முன்னதாக வக்கீல் சூட் உடன் ஜெய் நிற்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் இந்த சீரிஸூம்  வட சென்னை கதைக்களைத்த  அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ள நிலையில், இந்த சீரிஸின் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை தன்யா ஹோப் நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு, சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலரும் இந்த சீரிஸில் இணைந்துள்ளனர். 10 எபிசோடுகளைக் கொண்ட சீரிஸாக இந்தத் தொடர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola