ஃபகத் ஃபாசில் பயன்படுத்தும் Vertu Ascent Ti


மலையாளம் , தமிழ் , தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்களை தனது நடிப்பால்  வருகிறார் ஃபகத் ஃபாசில் . சமீபத்தில் மலையாள பட பூஜை ஒன்றில் ஃபகத் ஃபாசில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஃபகத் ஃபாசில் குட்டியாக ஒரு பட்டன் ஃபோனை பயன்படுத்தியது அனைவரது கவனத்தை ஈர்த்தது. பார்க்க சிறியதாக தெரியும் இந்த ஃபோனின் விலை ரசிகர்களை வாய்பிளக்க செய்துள்ளது. அப்படி இந்த ஃபோனில் என்ன சிறப்பம்சம் தெரியுமா

Continues below advertisement


Vertu Ti சிறப்பம்சங்கள்


உலகளவில் மிக குறைவானர்களே பயன்படுத்தும் செல்ஃபோன் Vertu Ascent Ti. பிரபல செல்ஃபோன் நிறுவனமான நோக்கியா இந்த செல்ஃபோனை தயாரிக்கிறது. கைக்கு அடக்கமாக தோன்றும் இந்த செல்ஃபோன் மிக தேர்ந்த கைவினை கலைஞர்களால் உருவாக்கப்படுகிறது. இதன் பாகங்கள் விமானத்தின் பாகத்திற்கு பயன்படுத்தப்படும் டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்டுகின்றன. இதனால் இந்த செல்ஃபோன் உறுதியாகவும் அதே நேரத்தில் எடைகுறைவாகவும் இருக்கிறது. மேலும் துருப்பிடிக்காமல் பல வருடங்களுக்கு உழைக்கக் கூடியது.  மேலும் இந்த செல்ஃபோனின் ஸ்கிரீன் சஃபையர் எனப்படும் நீலக்கல்லால் செய்யப்படுகிறது. சஃபையர் கல்லால் செய்யப்படுவதால் கீழே விழுந்தாலும் செல்ஃபோன் உடையாது. மேலும் ஒரு சின்ன கீறல் கூட இந்த செல்ஃபோனி விழாது. எவ்வளவு வெளிச்சம் பட்டாலும் இந்த செல்ஃபோனில் டிஸ்பிளே துல்லியமாக தெரியக்கூடியது. 


இந்த ஃபோனின் சில பாகங்கள் தங்கம் , அல்லது முதலை தோலாலும் செய்யப்படுகின்றன. தங்களது வசதிக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் செல்ஃபோனை தகவமைத்துக் கொள்ளலாம். பட்டன்கள் எல்லாம் தரமான லெதரால் செய்யப்படுகின்றன. எண்ணிக்கையைக் காட்டிலும் தரத்தை மையமாக கருதுவதால் மிக குறைந்த அளவே இந்த ரக ஃபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 4 லட்சம் Vertu Ascent Ti செல்ஃபோன்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த செல்ஃபோன் பயன்பாட்டாளர்களுக்கு என 24 மணி நேரமும் இலவச சேவையை நிறுவனம் வழங்குகிறது. ஹோட்டலில் ரூம் புக் செய்வது முதல் டிக்கெட் புக் செய்வது வரை எல்லா சேவைகளும் வழங்கப்படுகின்றன. 


Vertu Phone Ascent Ti விலை


கடந்த 2017 ஆம் ஆண்டு Vertu Phone Ascent Ti ஃபோன் விற்பனைக்கு வந்தது. இன்றைய தேதியில் இந்த செல்ஃபோன் ரூ 7 முதல் 10 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.