ஈராக்கில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.

ஈராக்கின் அல்-குட் நகரில் உள்ள ஒரு ஹைப்பர் மார்க்கெட்டில் வியாழக்கிழமை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாக வாசித் மாகாண ஆளுநர் முகமது அல்-மியாஹி தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டிடத்தின் பெரும்பகுதி தீப்பிடித்து எரிவதையும், புகை மூட்டங்கள் வெளியேறுவதையும் உறுதிப்படுத்தப்படாத வைரல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

"ஒரு பெரிய ஷாப்பிங் சென்டரில் ஏற்பட்ட துயர தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை சுமார் 50 பேரை எட்டியுள்ளது” என ஆளுநர் தெரிவித்துள்ளார்.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஆனால் ஆரம்ப விசாரணை முடிவுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று ஈரானின் அரசு செய்தி நிறுவனமான ஐஎன்ஏ தெரிவித்துள்ளது.

"கட்டிடம் மற்றும் வணிக வளாகத்தின் உரிமையாளர் மீது நாங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளோம்" என்று ஆளுநர் கூறியதாக ஐஎன்ஏ தெரிவித்துள்ளது.