வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவதற்கு முன்பே போ என் இதயம் தரையில் பாடல் மூலம் திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் பவானிஸ்ரீ. பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கையும் ஆவார். விடுதலை படத்தில் இடம்பெற்ற காட்டு மல்லி பாடலையும் பவானிஸ்ரீயையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், பவானிஸ்ரீ அளித்திருக்கும் பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

நடிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள்

சினிமாவை பொறுத்தவரை இங்கு ஆணாதிக்கம் நிறைந்த உலகமாக இருக்கிறது என்பதை பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக சில இயக்குநர்களும், நடிகர்களின் செயல்களும் பட்டவர்த்தனமாக தெரிய வருகிறது. இந்த சூழலில், சினிமாவில் பெண்களுக்கு நடக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற சொல்லாடல் காலம் காலமாக நிகழ்ந்து வருகிறது. அதை எதிர்த்து வெளிப்படையாக சண்டையிட்ட நடிகைகளுக்கு சில காலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்காத சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக சினிமா உலகில் நடிப்பில் மட்டுமே பெண்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இயக்குநர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் போன்ற பணிகளில் மிகவும் குறைவு தான். 

அட்ஜெஸ்ட்மண்ட் பிரச்னை

சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆக வேண்டுமா, அல்லது பிரபலமான இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும் அந்த பெண்களிடம் கேட்கும் முதல் கேள்வி அட்ஜெஸ்ட்மெண்ட். பட வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என சிலர் மறைமுகமாகவும், பலர் ஓபனாகவும் கேட்பதாக பல முன்னணி நடிகைகள் பல பேட்டிகளில் தெரிவித்திருக்கின்றனர். அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற பிரச்னையை எதிர்கொள்ளும் நடிகைகள் சாமர்த்தியமான பதிலால் தப்பித்து விடுவதாகவும் அவர்களே தெரிவிக்கின்றனர். 

Continues below advertisement

நடிகைகள் எதிர்ப்பு

சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்னைக்கு பல முன்னணி நடிகைகள் குரல் கொடுத்திருக்கின்றனர். அதிலும், 90களில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த விசித்ரா, ஷகிலா, நயன்தாரா, சனம் செட்டி போன்ற நடிகைகளும் இதுகுறித்து சமீபத்திய பேட்டிகளில் தைரியமாக பேசியுள்ளனர். பெண்கள் சிலர் இடம் கொடுப்பதால் தான் இதுபோன்ற தவறுகள் நடப்பதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகை பவானிஸ்ரீ அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஓபனாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 

விடுதலை பட நாயகி ஓபன் டாக்

இதுவரை எனக்கு அந்த பிரச்னை ஏற்பட்டது கிடையாது. சினிமாவில் எனக்கு யாரும் அப்படி அப்ரோச் பண்ணவில்லை. அட்ஜெஸ்ட்மண்ட் என்ற ஒன்றை நான் சந்திக்கவும் இல்லை. இதற்கு காரணம் பெண்களின் பயமும், தயக்கமும் தான் சிலர் தவறு செய்கிறார்கள். தற்போது அட்ஜெஸ்மண்ட்டில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள  மீ டூ போன்ற பல விஷயங்கள் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களில் பெண்கள் பயப்பட கூடாது. ஒரு ஆண் தங்களிடம் தவறான எண்ணத்தோடு அணுகினால் பயம் இல்லாமல் வெளியே கொண்டு வந்தாலே போதும். பிறகு அவர்களது முகத்திரை கிழிந்துவிடும். இதன் மூலம் மற்ற பெண்களுக்கும் இது நடப்பதை தவிர்க்க முடியும் என தெரிவித்திருக்கிறார்.