தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். ஆக்‌ஷன் கிங் எனப்படும் இவரது உறவினர் நடிகர் துருவ் சார்ஜா. கன்னட திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்ட்டின்.



கே.ஜி.எஃப். திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரையுலகில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஏராளமான திரைப்படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் துருவ் சார்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மார்ட்டின். 13 மொழிகளில் தயாராகியுள்ள இந்த படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

ரூ.100 கோடி பட்ஜெட்:


படத்தை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜூன் பங்கேற்றார். அப்போது, அவர் கூறியதாவது, “என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா. ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன்.

இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய  ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர்.

ப்ளாக்பஸ்டர் உறுதி:

கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள், துருவாவிற்கு இந்தப்படம் பெரிய  பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், நன்றி.”


இவ்வாறு அவர் பேசினார்.


அர்ஜூன்தான் காட்ஃபாதர்:


படத்தின் நாயகன் துருவ் சார்ஜா பேசியதாவது, தமிழில் எனக்கு ரெண்டாவது படம், செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள், இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள். இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி என்றார்.


கன்னட திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான ஏபி அர்ஜூன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகியாக வைபவி நடித்துள்ளார். இவர்களுடன் அன்வேஷி, சுக்ருதா, அச்யூத்குமார், நிகிதினன் தீர் ஆகியோர் நடித்துள்ளனர். மணி சர்மா பாடல்களுக்கு இசையமைக்க ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 11ம் தேதி ரிலீசாக இருக்கிறது.