Dhanush D51: திருப்பதி கோவிலில் தனுஷ் - திடீரென விசிட் அடித்ததால் அலைமோதிய கூட்டம்

Dhanush D51: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வந்த தனுஷுக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு சால்வை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

Continues below advertisement
Dhanush D51: டி51 படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். 
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் கோலிவுட் மட்டுமில்லாமல், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கேப்டன் மில்லர் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிப்பெற்றது. பீரியட் ஜானரில் எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் படத்தில் ஆக்‌ஷன்களில் அசத்தி வரவேற்பை பெற்றிருந்தால் நடிகர் தனுஷ். 
 
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து அவரே இயக்கும் டி50 படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இது மட்டுமில்லாமல், தனது அக்கா மகன் ஹீரோவாகவும், நடிகை அனிகா சுரேந்திரன் நடிக்கும் “ நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” என்ற படத்தையும் தனுஷ் தயாரிக்கிறார். இது மட்டுமில்லாமல், இயக்குநர் ஷேகர் கம்முலா இயக்கும் டி51 படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்ட பர் நடிக்கின்றனர். படத்தை ராம்மோகன் ராவ் மற்றும் சுனில் சாரங்க் இணைந்து தயாரிக்கின்றனர். 
 
கடந்த சில நாட்களாக படப்பிடிப்புகள் திருப்பதியில் நடந்து வருகிறது. திருமலைக்கு செல்லும் அலிபிரி நுழைவு வாயில் அருகே கருடன் சிலை இருக்கும் இடத்தில் நேற்று படப்பிடிப்பு நடந்தது. அதனால் திருமலைக்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். படப்பிடிப்பு காரணமாக, அந்த வழியாக செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களும், அலிபிரி வழியாக திருமலைக்கு செல்ல முடியாமல் தவித்தன. இதனால், திருமலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பிரச்சனையானது. 
இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற நடிகர் தனுஷ் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த தனுஷுக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு சால்வை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், கோவிலில் உள்ள ரங்கநாயர் மண்டபத்தில் தனுஷுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கோவிலுக்கு தனுஷ் வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை காண முந்தியடித்துக் கொண்டு சென்றனர். இதனால் திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பின்னர், போலீசார் பாதுகாப்புடன் தனுஷ் பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பப்பட்டார். 
 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola