தனுஷ் நடிப்பில் வெளியான "யாரடி நீ மோகினி", "உத்தம புத்திரன்", "குட்டி" உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் 4வது முறையாக அவருடன் இணைந்துள்ள படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தை தனுஷின் படிக்காதவன், மாப்பிள்ளை படங்களை தொடர்ந்து 3வது முறையாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகைகள் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நடிகர்கள் பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இன்று ரிலீஸ் ஆனது. பாரதிராஜா தாத்தாவாகவும்,பிரகாஷ்ராஜ் அப்பாவாகவும் நடித்துள்ளனர். நித்யாமேனன் தோழியாக நடித்துள்ளார். ட்ரைலரை பார்க்கும்போது ஒரு ஃபீல்குட் படமாக திருச்சிற்றம்பலம் இருக்குமென ரசிகர்கள்கருத்து பதிவிட்டு வருகின்றனர். திருச்சிற்றம்பலம் படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாகவுள்ளது.
பாடல்கள் சூப்பர் ஹிட் :
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளதால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் சில தொழிநுட்ப வேலைகள் மட்டும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுஷ் தாய் கிழவி,மேகம் கருக்காதா பெண்ணே, தேன்மொழி ஆகிய 3 பாடல்களை எழுதியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தான் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரோடு இயக்குநர்கள் வெற்றிமாறன், செல்வராகவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.