கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பட்டையை கிளப்பி வருகிறார் நடிகர் தனுஷ். ”இவரா ஹீரோ “ என்றவர்கள் எல்லாம் , தனுஷின் கால் ஷீட்டிற்காக வரிசையில் காத்திருப்பதை நாமே அறிவோம். முயற்சி திருவினையாக்கும் என்பதற்கு சிறந்த உதாரணமே தனுஷ்தான் என்றால் மிகையில்லை.
நேற்று (ஜூலை 28) தனுஷ் தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு இந்திய ரசிகர்கள் , திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ், சந்தோஷ் நாராயணன், பிரசன்னா, பிரகாஷ் ராஜ், சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் .
மேலும், நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் பிரசன்னா அவர் பியானோ வாசிக்கும் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக, அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் வெளியாக உள்ள ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் இருந்து லைஃப் ஆப் பழம் பாடல், ‘நானே வருவேன்’ படத்திலிருந்து அப்டேட்டுடன் கூடிய போஸ்டர், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாக இருக்கும் ‘வாத்தி’ படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இன்று மாலை இந்தப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளில் வாழ்த்து தெரித்த அனைவருக்கும் நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்” எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வாழ்த்த நேரம் ஒதுக்கியவர். உங்களின் நிபந்தனையற்ற அன்பு, ஊக்கம் மற்றும் ஆதரவுக்காக என்னை வாழ்த்திய எனது ரசிகர்களுக்கும், ஒரு பெரிய அணைப்பிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக எனது ரசிகர்கள்தான் எனது ஆதரவின் தூண்கள்
உங்கள் எல்லா விருப்பங்களையும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் உணர்கிறேன். விரைவில் திரைப்படங்களில் சந்திப்போம். ஓம் நமசிவாய, காதலுடன் டி” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்