தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷ் மற்று ஐஸ்வர்யா தங்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக கடந்த 2022 ஆம் ஆண்டு அறிவித்தனர். இந்த விவாகரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மூன்று முறை விசாரணைக்கு வந்தது. மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆரஜாகாத காரணத்தால் வழக்கு அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டது. நான்காவது முறையாக கடந்த நவம்பர் 21 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் ஆஜராகி தங்கள் முடிவை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று நவம்பர் 27 ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்ந்தது. இந்த வழக்கில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம் . ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இணைந்து வாழ்வார்கள் என நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
தனுஷ் ஐஸ்வர்யா திருமண வாழ்க்கை
நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கல் உள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணங்களால் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள்.
ஏ.ஆர் ரஹ்மான் முதல் தனுஷ் வரை
இந்த ஆண்டைப் பொறுத்தவரை பல்வேறு தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி , இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் - சாய்ரா பானு , நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி என அடுத்தடுத்து பிரபலங்கள் தங்கள் திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அதிர்ச்சித் தகவல்களை அறிவித்தார்கள்.