திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஆதியூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா பயிலும் ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவ மாணவி சிறுவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் திருப்பத்தூர் நகர காவல் நிலையம், தலைமை தபால் நிலையம், ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் களப்பயணம் மேற்கொண்டனர். 

 

அப்போது பள்ளியின் சிறுவர்கள் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்திற்கு வந்தபோது அவர்களை திருப்பத்தூர் நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி அன்போடு வரவேற்றார். அப்போது காவலர் சீருடையில் வந்த பள்ளி சிறுவனை அழைத்து காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி தன்னுடைய இருக்கையில் அமர வைத்து அழகு பார்த்தார். 



 

மேலும் காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கிகளை காண்பித்து எவ்வாறு கையாள வேண்டும் அதனை எப்போது பயன்படுத்த வேண்டும், மேலும் காவலர்கள் பயன்படுத்தும் வாக்கி டாக்கி போன்றவர்களை காண்பித்து அது பயன்கள் மற்றும் எதற்காக உதவுகிறது என்பது  குறித்து எடுத்துரைத்தார்.

 

மேலும் உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லுங்கள் வண்டி ஓட்டும் பொழுது தலைக்கவசம் அணிய வேண்டும் இல்லையென்றால் காவலர்கள் அபராதம் விதிப்பார்கள் என சொல்ல வேண்டும் என மாணவிகளுக்கு காவலா ஆய்வாளர் ஜெயலட்சுமி பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

 

சிறுவனை அழைத்து காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்த சம்பவம் அனைவரின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது..