1999ஆம் ஆண்டு தொடங்கி சன் டிவியில் ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகி இன்று வரை கொண்டாடப்படும் சீரியல் சித்தி. இதில் பிரபல வில்லன் கதாபாத்திரமான ‘டானியல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்து தன் ரசிகர்களை ஈர்க்கத் தொடங்கினார் பாலாஜி.


பிரபல சைக்கோ கொலைக்காரன் 


தொடர்ந்த அக்கதாபாத்த்திரத்தின் பெயரால் டானியல் பாலாஜி என அழைக்கப்பட்ட இவர், பல சீரியல்கள், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.


குறிப்பாக வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாகவும் சைக்கோ கொலைகாரனாகவும் நடித்து ரசிகர்களை அச்சத்தில் உறைய வைத்தார்.


அதனைத் தொடர்ந்து இயக்குநர் கௌதம் மேனன், வெற்றி மாறன் ஆகியோரின் பொல்லாதவன், அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களில் நடித்து இந்த இயக்குநர்களின் ஆஸ்தான நடிகராக வலம் வரத் தொடங்கினார்.


 






பிரபல படங்களை மிஸ் செய்த பாலாஜி


இந்நிலையில், 2011ஆம் ஆண்டு வெளியாகி ஆறு தேசிய விருதுகளைக் குவித்த ஆடுகளம் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டியது டானியல் பாலாஜி தான் எனும் சுவாரஸ்யத் தகவல் வெளியாகி வில்லது.


வயதான பேட்டைக்காரன்  பாத்திரத்துக்கு முகத்தில் சுருக்கங்கள் இல்லாததால் டானியல் பொருத்தமாக இருக்க மாட்டார் என இறுதியில் இவருக்கு பதிலாக எழுத்தாளரும் நடிகருமான வி.ஐ.எஸ். ஜெயபாலன் நடிக்க வைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதேபோல் என்னை அறிந்தால் படத்திலும் பிரபல வில்லன் கதாபாத்திரமான விக்டர் பாத்திரத்துக்கு முதல் தேர்வாக டானியல் பாலாஜி தான் இருந்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.