பயில்வான் ரங்கநாதன் என்பவர் இந்திய நடிகராகவும், பரபரப்பான திரைப்பட விமர்சகராகவும் அறியப்படுகிறார். இவர் குறிப்பாகத் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் துணை பாத்திரங்களில் நடித்தும்வருகிறார். 




'ப்ளுசட்டை' என்ற குறும்படக் குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் குறும்பட திரையிடல் நிகழ்வு சென்னையில் சமிபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பேரரசு மற்றும் நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் உள்ளிட்டோர் காசு கொடுக்காமல் ஓசியில் படம் பார்த்து விட்டு விமர்சகர்கள் விமர்சிக்க வேண்டாம் என பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




அதற்கு மேடையிலேயே இருவருக்கும் பதிலடி கொடுத்தார் பயில்வான் ரங்கநாதன்,


Also Read | நீட் தேர்வு விலக்கு, கல்வி கொள்கை... பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்திப்பு..!


“பாலசந்தரின் அரங்கேற்றம் படத்திலிருந்து நான் சினிமா விமர்சனம் செய்கிறேன். காலையில் நான்கு மணிக்கு காசு கொடுத்து படம் பார்த்த பிறகுதான் விமர்சனம் எழுதுவேன். 1967ஆம் ஆண்டில் போலீஸுக்கு செலக்ட்டாகி 7 வருடங்கள் எஸ்.ஐ.யாக வேலை பார்த்தேன். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் செக்யூரிட்டி ஆபிஸராகவும் இருந்திருக்கிறேன். என்.டி.ராமாராவ், சோபன் பாபுவுடன் சினிமாவில் சண்டை போட்டிருக்கிறேன். இதெல்லாம் இவர்களுக்கு தெரியாது. என்னைப்பற்றி தெரியாமல் யாரும் எதுவும் பேச வேண்டாம். இதுவரை நான் பொய் பேசியதில்லை. சினிமா சுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நான் பேசுகிறேன். நான் சினிமாக்காரன் என்பதால் எனக்கு பெண் கொடுக்க மறுத்தார்கள். அந்த வேதனையில்தான் சினிமா நல்லா இருக்க வேண்டும் என்று பேசுகிறேன்” என்று கூறினார்.


மேலும், “என் யூடியூப் சேனலில் நடிகைகளை பற்றி நான் ஒரு போதும் தப்பா பேசியதில்லை. பேசவும் மாட்டேன்! தேவயாணி, நதியா பற்றியெல்லாம் என்றைக்காவது நான் தப்பா பேசியிருக்கேனா? எந்த நடிகைகள் தப்பா நடக்கிறார்களோ அதைத்தான் சுட்டிக் காட்டி வருகிறேன்” என்று பதில் அளித்தார்.


” மோசமான விமர்சனம் கொடுத்தால் வசூல் பாதிக்கும் என்பதெல்லாம் உண்மையில்லை. வலிமை படத்திற்கும் மோசமான விமர்சனங்கள் வந்தது, அதனால் அந்தப் படத்தின் வசூல் கெட்டுவிட்டதா என்ன? நல்ல படங்களை நல்ல படங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன்” என்றார் பயில்வான் ரங்கநாதன்.




” நான் வெளிப்படையாக சொல்கிறேன், என்னை பற்றி பேசுவதற்கு இங்குள்ள யாருக்கும் தகுதில்லை. ஆம், நான் யூடியூப் மூலம் நிறைய சம்பாதிக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அதற்காக நான் பொய் சொல்ல மாட்டேன். சமீபத்தில் கமிஷனர் ஆபிஸிற்கு போயிருந்தேன். அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், பின்றீங்க சார், விடாதீங்க, கிழிகிழினு கிழிங்க சார்னு சொன்னார்கள்.  இந்த விழாவிற்கு வந்துள்ள பல பெண்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். நான் தவறாக பேசுகிறேன் என்றால் என்னுடன் அவர்கள் எப்படி புகைப்படம் எடுப்பார்கள? “என்று பதிலுக்கு கேள்விக் கேட்டார் பயில்வான் ரங்கநாதன். அவரின் இந்த பேச்சு பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேடையில் சிலர் பயில்வான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களுக்கு அங்கேயே பதிலளித்தார் பயில்வான்.