நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர். 

Continues below advertisement

Continues below advertisement

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி 3வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 

மேலும் வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து ஏற்கனவே காலத்துக்கும் நீ வேணும், மறக்குமா நெஞ்சம் ஆகிய பாடல்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முன்னதாக இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என  கூறப்பட்டுள்ள நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் குவிந்துள்ளனர்.  இதனைப் பார்த்து சிம்புவின் ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.