2010 ஆம் ஆண்டு வெளியான படங்களில் எந்தெந்த படங்களுக்கு தமிழ்நாடு அரசு விருதுகள் கிடைத்துள்ளன என்பதை இங்கு பார்க்கலாம்
சிறந்தபடம் - முதல்பரிசு | மைனா | |
சிறந்தபடம் -இராண்டாம் பரிசு | களவாணி | |
சிறந்தபடம் - மூன்றாம் பரிசு | புத்ரன் | |
சிறந்தபடம் - சிறப்பு பரிசு | நம்ம கிராமம் | |
சிறந்த நடிகர் | ராவணன் | விக்ரம் |
சிறந்த நடிகை | மைனா |
அமலாபால் |
சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) | புத்ரன் | ஓய்.ஜி. மகேந்திரா |
சிறந்த நடிகை (சிறப்புப்பரிசு) | புத்ரன் | |
சிறந்த வில்லன் நடிகர் (சிறப்புப்பரிசு) | களவாணி | எஸ்.திருமுருகன் |
சிறந்த நகைச்சுவை நடிகர் | மைனா | தம்பிராமையா |
சிறந்தகுணச்சித்திரநடிகர் | ஈசன் | சமுத்திரக்கனி |
சிறந்தகுணச்சித்திரநடிகை | களவாணி | சரண்யா பொன்வண்ணன் |
சிறந்த இயக்குநர் | மைனா | பிரபுசாலமன் |
சிறந்த கதையாசிரியர் | களவாணி | சற்குணம் |
சிறந்த உரையாடல் ஆசிரியர் | களவாணி | சற்குணம் |
சிறந்த இசையமைப்பாளர் | பையா | யுவன் ஷங்கர் ராஜா |
சிறந்த பாடலாசிரியர் | நீயும் நானும் | பிறைசூடன் (நீயும் நானும்) |
சிறந்த பின்னணிப் பாடகர் | ராவணன் | கார்த்திக் |
சிறந்த பின்னணிப் பாடகி | எந்திரன் | சின்மயி |
சிறந்த ஒளிப்பதிவாளர் | ராவணன் | சந்தோஷ்சிவன், மணிகண்டன் |
சிறந்த ஒலிப்பதிவாளர் | யாதுமாகி | ஜி.தரணிபதி |
சிறந்த எடிட்டர் | நமது கிராமம் | பி.லெனின் |
சிறந்த ஆர்ட் டைரக்டர் | ஆயிரத்தில் ஒருவன் | டி.சந்தானம் |
சிறந்த சண்டைப் பயிற்சியாளர் | வந்தே மாதரம் | அனல் அரசு |
சிறந்த நடன ஆசிரியர் | பையா | ராஜூசுந்தரம் |
சிறந்த ஒப்பனைக்கலைஞர் | பாஸ் (எ) பாஸ்கரன் | மனோகர் |
சிறந்த தையற்கலைஞர் | களவாணி | நட்ராஜ் |
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் ( ஆண்) | நர்த்தகி | கே.மனோகர் |
சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்(பெண்) | பாஸ் (எ) பாஸ்கரன் | சவீதா |
சிறந்த குழந்தை நட்சத்திரம் | நந்தலாலா | அஸ்வத் ராம் |
விருதுகள் தாமதம் ஏன்?
தமிழ் சினிமாவின் மறுபக்கங்களாக இருந்த திரைக்கலைஞர்களே பின்னாளில் தமிழகத்தில் ஆட்சி அரியணையில் அமர்ந்தனர். இதனால் தமிழ் சினிமாவும் ஆட்சியாளர்களும் பிரிக்க முடியாத உறவை கொண்டிருந்தனர். ஆரம்பகாலத்தில் சினிமா கலைஞர்களுக்கும், தொலைக்காட்சி வந்த பின்னர் சின்னத்திரை கலைஞர்களுக்கும் தமிழ்நாடு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆனால் இந்த விருதுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. அதற்கான காரணத்தையும் தமிழக அரசு தெரிவிக்கவில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டு காலமாக கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கபடாமல் இருந்த நிலையில், இந்த விருதுகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கும் பணியானது 2015 ஆம் ஆண்டு துவங்கியது. அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு, 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் விருதுகள் வழங்கும் விழா நடைபெறவில்லை.
அதிமுகவின் இறுதிகாலக்கட்டத்தில் கலைமாமணி விருதுகள் மட்டும் வழங்கப்பட்டன. அதன் பின்னர் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழா நடைபெறமலேயே இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு வருடம் முடிவுற்ற நிலையில் தமிழ்நாடு அரசு அந்த விருதுகளை வழங்கும் விழாவை நடத்தி விருதுகள் வழங்கி கலைஞர்களை கவுரப்படுத்த உள்ளது. இந்த நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 4 ஆம் தேதி கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.
விருதுகள் பட்டியலில் முக்கியமானவை:
சிறந்த திரைப்படத்திற்கான விருது பெறும் படங்கள்:
2009- பசங்க
2010- மைனா
2011-வாகை சூடவா
2012-வழக்கு எண் 18/9
2013- இராமானுஜன்
2014- குற்றம் கடிதல்
சிறந்த நடிகர் நடிகையருக்கான விருதுகள்
2009-கரண், பத்மப்ரியா
2010-விக்ரம், அமலாபால்
2011-விமல், இனியா
2012-ஜீவா, லட்சுமிமேனன்
2013-ஆர்யா, நயன்தாரா
2014- சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ்
சிறந்த இயக்குநர்கள்
2009- வசந்தபாலன் (அங்காடி தெரு)
2010- பிரபுசாலமன் (மைனா)
2011-ஏ.எல்.விஜய் ( தெய்வத்திருமகள்)
2012-பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013-ராம் (தங்கமீன்கள்)
2014- ராகவன் (மஞ்சபை)
சிறந்த சீரியல்கள்
2009-திருமதி செல்வம்
2010-உறவுக்கு கைக்கொடுப்போம்
2011-சாந்தி நிலையம்
2013-வாணி ராணி
2012-இரு மலர்கள்