‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்றுள்ள முழு பாடல்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் செப்டம்பர் 15ம் தேதி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.
இந்தத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைகழகத்தில் வைத்து நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்து கொள்ளும் இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடந்துகிறார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் ட்ரெய்லரும் வெளியிடப்பட உள்ளது.
மூன்றாவது முறை :
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் - நடிகர் சிம்பு கூட்டணியில் இது மூன்றாவது படம். "விண்ணைத்தாண்டி வருவாயா", "அச்சம் என்பது மடமையடா" படங்களின் பட்டியலில் அடுத்து இணைந்துள்ளது "வெந்து தணிந்தது காடு" திரைப்படம். இந்தத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ பாடலான 'காலத்துக்கும் நீ வேணும்' பாடலும், அதனைத்தொடந்து இரண்டாவது பாடலாக "மறக்குமா நெஞ்சம்..." என்ற பாடல் சமீபத்தில் தான் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்தப்பாடல்களின் முழு பட்டியல் கீழே:
‘வெந்து தணிந்தது காடு’ படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயிண்ட் மூவிஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.