தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவருக்கு தற்போது 61 வயதாகிறது. ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான என்.டி.ராமராவின் மகனான இவர், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவும், தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாகவும் தற்போது உள்ளார்.


டோலிவுட் சூப்பர்ஸ்டார் ஆனால் ட்ரோல் மெட்டீரியல்!


ஆனால் இவர் தன் கருத்துகள் மற்றும் செய்கைகள் மூலம் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களை தாக்குவது, சர்ச்சையான கருத்துகளைத் தெரிவிப்பது ஆகியவை பாலகிருஷ்ணாவின் வழக்கமான நடவடிக்கைகளுள் ஒன்றாக மாறிவிட்டது.


பாலகிருஷ்ணா படங்களுக்கு என்றே டோலிவுட்டில் பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. ஆனால் ட்ரெய்னை பின்னோக்கி ஓட வைப்பது, கோழிகளை வைத்து எதிராளிகளை வீழ்த்துவது, கண்டபடி பரத  நாட்டியம் ஆடுவது  உள்ளிட்ட அவரது படக் காட்சிகள் இன்றைய இண்டர்நெட் காலக்கட்டத்தில் பெரும் ட்ரோல் மெட்டீரியலாகி நெட்டிசன்கள் மத்தியில் கேலிக்குள்ளாக்கப்பட்டும் , விமர்சனங்களைப் பெற்றும் வருகின்றன.


கிக்கிய வீடியோ, கடுப்பான நெட்டிசன்கள்


 






அந்த வகையில் முன்னதாக தன்னுடன் ஃபோட்டோ எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் குழந்தையை, பாலகிருஷ்ணா தூக்கத்திலிருந்து அடித்து எழுப்பி போஸ் கொடுக்க வைக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


ஒரு பக்கம் நெட்டிசன்களை இந்த வீடியோ சிரிப்பில் ஆழ்த்தினாலும், மற்றொரு பக்கம் இது மிக மோசமான செயல் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து சர்ச்சைக் கருத்து!


முன்னதாக இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாலகிருஷ்ணா பேசிய வீடியோ கடும் கண்டனங்களைப் பெற்றது.


அதாவது  “ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே எனக்கு தெரியாது. ஆண்டுக்கு ஒரு ஹிட் கொடுப்பாரே அவர்தானே! , ஏதோ ஆஸ்கார் விருது வாங்கியிருக்கார், எனக்கு அதைப் பத்தியெல்லாம் தெரியாது.  நான் பாரத ரத்னா விருதே வேண்டாம்னு சொன்னவன்.


 






அது என் கால் நகத்துக்கு சமம், என் குடும்ப கௌரவத்துக்கு முன்னால எல்லாம் காலுக்கு கீழதான்” எனத் தெரிவித்து ரஹ்மான் ரசிகர்களைக் கடுப்பாக்கினார்.


கலாய் வாங்கினாலும் கல்லா கட்டும் படங்கள்


எனினும் பாலகிருஷ்ணாவின் இத்தகைய செயல்களைத் தாண்டி அவரது படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் கலெக்‌ஷன் அள்ளி வருகிறது. முன்னதாக வெளியான அவரது ’அகண்டா’ திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.