பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே தெரியாது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர், புகழ்பெற்ற நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமாராவின் மகனும் ஆவார். அரசியல்வாதியுமான இவர், எம்எல்ஏவாகவும் உள்ளார். முன்னணி நடிகராக உள்ள இவர், சர்ச்சையான கருத்துகளை கூறி பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார். இது தொடர் கதையாகவே இவருக்கு அமைந்து வருகிறது. அத்துடன், ரசிகர்கள் அத்துமீறி நடந்தால் அவர் அடிப்பது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து, அது தொடர்பான வீடியோவும் வெளியாகி நெட்டிசன்களிடம் திட்டு வாங்கியுள்ளார்.
Krithi Shetty | ஒரே படத்தில் உச்சம்: கோடிகளில் சம்பளம் கேட்கும் இளம் நடிகை!
இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பாரத ரத்னா விருது குறித்து இழிவாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ளார் பாலகிருஷ்ணா. சமீபத்தில், தனியார் தெலுங்கு சேனலுக்கு ஒன்று பாலகிருஷ்ணா பேட்டியளித்தார். அதில், யாரோ ரஹ்மான். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அதைஎல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். ஏதோ வருடத்திற்கு ஒரு ஹிட் கொடுப்பார். ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் என்று பேசியுள்ளார்.
அதேபோல், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்டிஆரின் கால் விரலுக்கு சமம், இந்த விருதுகள் என் காலடிக்கு சமம் என்றும், எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது என்றும், ஆகையால் இந்த விருதுகள் தான் வருத்தப்பட வேண்டுமே தவிர தன் குடும்பமோ அல்லது என்னுடைய அப்பாவோ அல்ல எனவும் பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர், தன்னை போன்ற சக கலைஞர்களுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்று சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறிவருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் இவரின் பேச்சால் கொதித்துப் போயுள்ளனர். ஆஸ்கர் விருதை வாங்கி இந்திய சினிமாவை உலக அரங்கில் தெரிய வைத்த ரஹ்மானை யாரென்று தெரியாது என்பதா கேள்வி எழுப்பிய ரசிகர்கள், பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை இழிவுபடுத்திய பாலகிருஷ்ணாவுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
Navarasa | ''சூர்யாவைத் தவிர இன்னொருவரா? கற்பனை கூட செய்யமுடியாது’’ - கெளதம் மேனன்