தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வருவதால், தன்னுடைய சம்பளத்தை விஜய் சேதுபதியின் ரீல் மகளான நடிகை  கிர்த்தி ஷெட்டி  ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வெள்ளித்திரையில் கால்பதித்த முதல் படத்திலேயே தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் நடிகைகள் தற்பொழுது சொற்பமாகியுள்னனர். ஆனால் அதனையெல்லாம் முறியடிக்கும் வகையில் முதல் படத்திலேயே ரசிகர்கள் நெஞ்சில் இடம் பிடித்துள்ளார் கிர்த்தி ஷெட்டி . புதுமுக நடிகை என்று சொல்ல முடியாத அளவிற்கு தன்னுடைய கதாபாத்திரத்தினுள் புகுந்திருப்பார் என்றே சொல்லலாம். ஆம் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுக இயக்குநர் பிச்சி பாபு சனா இயக்கிய உப்பெனா படத்தில் புதுமுக நாயகியாக வலம் வந்தார் கிர்த்தி ஷெட்டி . நாயகனாக புதுமுக  நடிகர் வைஷ்ணவ் தேஜ் நடித்திருந்தார். இவ்விருவரும் காதலிப்பது போன்றும் அதனை சாதி வெறிப்பிடித்த தந்தை எதிர்ப்பது போன்று கதைக்களம் அமையப்பெற்றது.





இதில் நாயகியின் தந்தையாக நடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.  தமிழ் திரையுலகில்  முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். எந்தக் கதாபத்திரத்தினையும் உள்வாங்கிக்கொண்டு நடிப்பில் வல்லமை பெற்ற விஜய் சேதுபதி தெலுங்கிலும் தன்னுடைய திறமையினை வெளிகாட்டியுள்ளார்.  உப்பெனா படத்தில் நாயகியின் தந்தையாகவும், வில்லனாகவும் தன் நடிப்பினை வெளுத்துக்கட்டியிருப்பார். சாதி வெறிப்பிடித்த தன் தந்தையிடமிருந்து  தன் காதலியினை இறுதியில் கரம் பிடித்துவிடும் கிர்த்தி ஷெட்டி  தன்னுடைய காட்சிகளை மிக அருமையாக நடித்திருந்தார்.


இதனையடுத்து புதுமுக நடிகையாக கிர்த்தி ஷெட்டிக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகத்தொடங்கியது.  இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியால் நாயகி கீர்த்தி ஷெட்டிக்குத் தொடர் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் ஒரு படம், நானி நடிக்கும் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ மற்றும் சுதீர் பாபு நடிக்கும் தலைப்பிடப்படாத ஒரு படம் என மூன்று படங்களில் கீர்த்தி ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில வாரங்களாகவே, பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்திலும் கிர்த்தி ஷெட்டி  நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வர ஆரம்பித்தன. ஆனால், இதுகுறித்துப் படக்குழுவோ, கிர்த்தி ஷெட்டி தரப்போ எந்தத் தெளிவும் தரவில்லை.





இந்நிலையில்  தனது ட்விட்டர் பக்கத்தில் கிர்த்தி ஷெட்டி எனது அடுத்த படங்கள் குறித்து நிறைய புரளிகளைக் கேள்விப்படுகிறேன். நானி, சுதிர் பாபு, ராம் என இப்போதைக்கு மொத்தமாக 3 படங்களில் நான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளேன். என கூறியிருந்தார். இந்நிலையில் தான், பல புதிய படங்களுக்கு நடிகை கிர்த்தி ஷெட்டி  தற்பொழுது கமிட் ஆகியுள்ள நிலையில், அப்படங்களில் நடிப்பதற்கு ரூ. 2 கோடி சம்பளம் கேட்பதாக தெலுங்கு திரைத்துறை வட்டாரங்கள் தரப்பில் இருந்து தகவல்கள்  வெளிவருகின்றன.