இயக்குனர் சிவாவின் தம்பியும் ஆவணப்பட இயக்குனர் ஜெயக்குமாரின் மகனுமான  நடிகர் பாலா (பாலக்குமார்) 'அண்ணாத்த' படத்தில் நடிக்கிறார்.  சிவாவின் வீரம் திரைப்படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்நிலையில் அண்ணாத்த படத்திலும் முக்கியமான ரோலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து தனது பேஸ்புக் பதிவில் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்திருந்தார்.



இந்நிலையில் நடிகர் பாலா இரண்டாவது திருமணம் செய்துள்ள புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளன. இந்த திருமண புகைப்படங்களை நடிகர் பாலாவே சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் முதல் மனைவி அம்ருதாவை 2019ல் விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் பாலாவுக்கு அவந்திகா எனும் 9 வயதில் ஒரு மகள் உள்ளார். பாலாவின் கதையை இன்ஸ்பிரேஷனாக வைத்தே இயக்குனர் சிவா 'விஸ்வாசம்' படத்தை எழுதி இயக்கி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கேரளாவை சேர்ந்த டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமண வரவேற்பு கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவர்களது திருமணத்திலும், வரவேற்பிலும், நெருங்கிய உறவினர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கேரளாவில் உள்ள திருச்சூரில் நடைபெற்றது.



இரண்டாவது திருமணம் செய்துள்ள இவருக்கு திரையுலகினர் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.


நடிகர் பாலா 'வீரம்' படத்தில் தல அஜீத்தின் தம்பியாக நடித்தார். அதற்கு முன்பாகவே அவர் தமிழில் 'அன்பு' என்கிற படத்தில்  அறிமுகமானார். 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்தில் அவர் ரசிகர்களிடம் நன்கு பிரபலமடைந்தார். பின் நடிகர் பாலா மலையாளத்தில் Big B என்கிற படத்தில் மம்முட்டியின் தம்பியாக முருகன் என்கிற தமிழ் ஸ்டண்ட் ஆக்டராக நடித்தார். ஒரே படத்தில் கேரள மக்களின் இதய நாயகனானார். மோகன்லாலின் புலிமுருகன் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்தார். தற்போது மலையாளத்திலும், தமிழிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.


Neelima Rani Announces Pregnancy | "ஜனவரியில நாங்க நாலு பேரா இருப்போம்..." குழந்தை வரவை க்யூட்டாக அறிவித்த நீலிமா ராணி..