சின்னத்திரையின் மூலம் மிகவும் பிரபலமான நீலிமா ராணி தனது இரண்டாவது குழந்தையை வரவேற்பதாக இன்ஸ்டாவில் அறிவித்ததையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.


தமிழக மக்கள் இதயத்தில் எப்போதுமே சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு தனி இடம் இருக்கத்தான் செய்யும். சினிமாவில் கூட 2 மணிநேரம் வந்துவிட்டுப்போய்விடுவார்கள். ஆனால் சீரியலில் தினமும் கண்முன்னால் வரும் நடிகைகளை மறக்க முடியாது என்பது நிதர்சன உண்மை. அவர்கள் சீரியலில் இருந்து விலகினாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் சினனத்திரை நடிகை நீலிமா ராணி. சன்டிவியின் மிகவும் பிரபலமான வாணி ராணி, தாமரை, செல்லமே, அத்திப்பூக்கள்,கோலங்கள் போன்ற  சீரியல்களில்  நடித்து மக்கள் மனதினை கொள்ளை கொண்டவர். பெரும்பாலாக வில்லி கேரக்டரில் நடித்தாலும் அவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்தது. ஆனால் விஜய் தொலைக்காட்சியின் அரண்மனைக்கிளி  சீரியலோடு அவர் சீரியல் வாழ்க்கையில் இருந்து விலகினார்.



நீலிமா ராணி சின்னத்திரையில் மட்டுமில்லை, வெள்ளித்திரையிலும் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். குற்றம் 23, பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, மொழி மற்றும் இன்னும் சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். இவர் இசைவாணன் என்வரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கணவருடனும் அழகான மகளுடனும் வசித்து வருகிறார். இந்நிலையில்தான் நீலிமா, தனது திருமண நாளை முன்னிட்டு இன்ஸ்டாவில் தனது குடும்பத்துடன் இருக்கம் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதோடு மட்டுமின்றி நாங்கள் வரும் ஜனவரியில் நாங்கள் நால்வராக போகிறோம். 20 வாரங்கள் முடிந்துவிட்டது! இன்னும் 20 போக வேண்டும் !!! எங்களுக்கு மகிழ்ச்சி! ” என ரொம்ப க்யூட்டாக இரண்டாவது குழந்தையின் வரவை பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.






இவர் 1992-ஆம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு பெரும்பாலான சீரியல்களில் வில்லி கேரக்டரில் நடித்ததோடு வெள்ளித்திரையிலும் தன்னுடைய நடிப்பபை க்யூட்டாக வெளிப்படுத்திய நிலையில் தமிழகத்தில்  மிகவும் பரிச்சயமான நடிகையாகவே தற்போதும் இருந்து வருகிறார்.