அட்டகத்தி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் தினேஷ். இப்படம் மிகப்பெரிய வெற்றியோடு நடிகர் என்ற அடையாளத்தை கொடுத்த படமாகவும் அமைந்தது. இதனால், அட்டகத்தி தினேஷ் என்றே அழைக்கப்பட்டார். கதை தேர்வின் மூலம் ரசிகர்களை ஈர்ப்பவர் தினேஷ். அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஓரளவிற்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், கடந்தாண்டு வெளியான லப்பர் பந்து படம் தான் அவருக்கு வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்திருக்கிறது. 

Continues below advertisement

தண்டகாரண்யம் படம் ரிலீஸ்

இப்படத்திற்கு பிறகு அவரை ரசிகர்கள் பலரும் கெத்து தினேஷ் என்றே அழைக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில், இயக்குநர் அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் கெத்து தினேஷ் நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் இப்படத்தை தயாரித்திருக்கிறது. தண்டகாரண்யம் திரைப்படம் வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதால் அதற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. 

பாடம் கற்று தந்த குக்கூ

அதன் ஒரு பகுதியாக இப்படம் குறித்து நடிகர் தினேஷ் பேட்டி அளித்தார். அதில், சினிமாவில் நடிப்பதற்கு முன்பு நான் பயங்கரமா கூச்சப்படுவேன். ஒருவர்கிட்ட எப்படி பேசுவது என்பதே தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றிக்கொள்ள முயற்சித்தேன். குக்கூ படம் தான் என்னை முழுவதுமாக மாற்றியது. அந்தப் படம் பல விசயங்களை கற்றுக்கொடுத்தது. இன்றைக்கு ஏதோ ஓரளவுக்கு நடிக்கிறேன் எல்லோரும் சொல்லும் போது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கு என தெரிவித்தார். 

Continues below advertisement

100 கதைகளை ரிஜக்ட் செய்தேன்

மேலும் பேசிய அவர், லப்பர் பந்து படத்தின் வெற்றிக்கு பிறகு குழப்பம் வந்தது. எந்த படத்தில் நடிப்பது, எந்த மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடிப்பது என்பதை பற்றித்தான் அதிகம் யோசித்தேன். சினிமாவை பொறுத்தவரை ஒருவர் கதை சொன்னால் அந்த கதை பிடிக்கவில்லை என்றால் நோ சொல்லி பழக வேண்டும். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. அதை சிரித்தபடி அமைதியாக இந்த கதை பிடிக்கலைனு சொல்லிடுவேன். அந்த மாதிரி லப்பர் பந்து படத்திற்கு பிறகு 100 கதைகளை கேட்டிருக்கிறேன். எதுவும் சரியாக அமையவில்லை என நடிகர் தினேஷ் தெரிவித்துள்ளார்.