பாஜக அதிமுக கூட்டணி மூழ்குகின்ற கப்பல் இதில் ஏறவும் வேண்டாம் இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வபெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜக-அதிமுக கூட்டணி மக்கள் ஏற்காத ஒன்று
வ உ சிதம்பரனாரின் 154 வது பிறந்தநாள் மற்றும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்137 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், பாஜக அதிமுக கூட்டணிக்கு மக்கள் கெடு கொடுத்துள்ளனர். இதை பார்த்துக் கொண்டிருந்த டிடிவி தினகரன் வெளியே வந்துவிட்டார். ஓபிஎஸ் வெளியே வந்துவிட்டார். இன்னும் யாரெல்லாம் வெளியே வரப் போகிறார்கள் என தெரியவில்லை. அது மூழ்கின்ற கப்பல். அதில் ஏறினால் மூழ்கி விடுவோம் என்று ஒவ்வொருவராக காரணத்தை சொல்லி வெளியே வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜக அதிமுக கூட்டணியை ஏற்க மாட்டார்கள். அது எதார்த்தமான உண்மை.
தமிழ்நாட்டுக்கான நிதி மறுப்பு
இன்றும் நமது தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய ஜிஎஸ்டி வரி பணம் மத்திய அரசி கொடுக்கவில்லை. தமிழக மக்கள் ரத்தமும் சிந்தி கொடுத்த வரி பணம் 50 சதவீதத்தை நமக்கு கொடுக்க வேண்டும் ஆனால் 20% கொடுக்கின்றேன் என சொல்கின்றார். இதேபோல் பேரிடர் நிதி கொடுக்கவில்லை, பள்ளி கல்வித்துறைக்கு வரவேண்டிய நிதி கொடுக்கவில்லை. கேட்டால் மம்முலி கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும், புதிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்து கிட்டால்தான் பணத்தைக் கொடுப்போம் என்று சொல்கின்றார்கள். இது எவ்வளவு பெரிய ஜனநாயக எதிரான செயல்! இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.
கூட்டணியில் ஏற்பட்ட அதிருப்தி
ஆகவே தமிழக கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள். இதை புரிந்து கொண்டவர்கள் டிடிவி தினகரன் வெளியே வந்தார். இன்று செங்கோட்டையில் வெளியே வந்துள்ளார். ஆகையால் மக்கள் இவர்களுக்கு கெடு விடுத்து விட்டனர். பாஜக அதிமுக கூட்டணி மூழ்குகின்ற கப்பல். இதில் ஏறவும் வேண்டாம், இறங்கவும் வேண்டாம் என்று ஒவ்வொருவராக நினைத்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருக்கின்றனர்.
பாஜகவின் சித்து விளையாட்டு
உறவாடி கெடுக்கும் ஒரு கட்சிதான் பாஜக. இதற்கு பல சம்பவங்கள் தெரியும். சந்திரபாபு நாயுடு உடன் பிறந்த காலத்தில் கூட்டணியில் இருக்கும் பொழுது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஈடி ரயில் நடத்தி பாஜகவில் இணைக்க வைத்தனர். மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் அவர்களது சித்து விளையாட்டை நடத்தியுள்ளனர். இப்பொழுது உச்சபட்சமாக அதிமுகவில் அவர்களது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே அதிமுகவினர் விழித்துக் கொள்ள வேண்டும். விழித்துக் கொண்டவர்கள் விழித்துக் கொள்வார்கள்.
இதையும் படிங்க: ஆக்ஷனில் வெறித்தனம் கட்டும் சிவகார்த்திகேயன்...மதராஸி திரைப்பட விமர்சனம்
கச்சா எண்ணெய் – பொதுமக்களுக்கு கிடைக்காத நன்மை
ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை மலிவாக கிடைக்கின்றது. என யாருக்காக வாங்கினீர்கள்? அரசுக்காகவா? அம்பானிக்காக வாங்கினீர்களா? அப்படியானால் அம்பானியின் சென்டர்களிலிருந்து மக்களுக்கு மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றதா? பெட்ரோல் விலையில் ரூ.20 குறைத்து அம்பானி நிறுவனம் மக்களுக்கு வழங்கி உள்ளதா? கச்சா எண்ணெய் விலை குறைவாக கிடைக்கின்றது என்றால் பொதுமக்களுக்கும் அந்த விலையை குறைத்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.