இந்தியாவில் நாளுக்கு நாள் இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பைக் பயன்பாட்டை காட்டிலும் ஸ்கூட்டரையே அதிகம் பயன்படுத்த மக்கள் விரும்புகின்றனர். குறிப்பாக, தற்போது மின்சார வாகனங்களையே மக்கள் அதிகளவு விரும்புவதால் அதையே முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கின்றனர்.
அந்த வகையில், இந்த செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ள இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை? மைலேஜ் குறித்து கீழே விரிவாக காணலாம்.
1. Suzuki E Access:
சுசுகி நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Access. பெட்ரோலில் ஓடும் இதன் மின்சார வெர்சன் Suzuki e-Access. தரத்தில் எந்த குறையும் இல்லாத அளவிற்கு இதை வடிவமைத்துள்ளனர். இதன் விலை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1.20 லட்சம் வரை இருக்கும். இது செப்டம்பர் மாதம் சந்தையில் அறிமுகமாக உள்ளது.
இது TVS iQube, Ola S1 Air, Ather Rizta, மற்றும் Bajaj Chetak ஆகிய இ ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனை இணைத்துக் கொள்ளும் வசதி, கீ லெஸ் சிஸ்டம், வேகமாக சார்ஜ் ஏறும் வசதி இதில் உள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கி.மீட்டர் வரை செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 3.072 கிலோ வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சார்ஜ் ஏறுவதற்கு 2.12 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். மணிக்கு 71 கி.மீட்டர் வேகத்தில் இது செல்லும் ஆற்றல் கொண்டது. நகர்ப்புறங்களில் செல்வதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி ஆற்றலை அதிகரிக்கும் பணிகளும் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2. VLF Mobster:
இந்த மாதம் 25ம் தேதி நாட்டில் அறிமுகமாக உள்ளது இந்த VLF Mobster ஸ்கூட்டர். இது ஸ்போர்ட்ஸ் ரகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோலில் ஓடும் திறன் கொண்ட இந்த ஸ்கூட்டர் இரண்டு வகையிலான எஞ்ஜினில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு எஞ்ஜின் 125 சிசி எஞ்ஜின் ஆகும். இது 11.7 என்எம் டார்க் இழுதிறனும், 11.9 பிஎச்பி ஆற்றலும் கொண்டது. மற்றொன்று 180 சிசி எஞ்ஜின் திறன் கொண்டது. இது 15.7 என்எம் டார்க் இழுதிறனும், 17.7 பிஎச்பி ஆற்றலும் கொண்டது.
இதன் விலை ரூபாய் 1.70 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பெட்ரோல் டேங்கில் 8 லிட்டர் வரை நிரப்பிக் கொள்ளலாம். டேஷ்போர்ட் டிஜிட்டல்மயமாக உள்ளது. 4 ஸ்ட்ரோக் 4 வால்வ் single cylinder water cooled engine இதில் உள்ளது. இதில் கிக் ஸ்டார் கிடையாது. செல்ஃப் ஸ்டார்ட் மட்டுமே ஆகும். டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. மொத்த எடை 122 கிலோ ஆகும்.
3. BGauss RUV 350:
ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் சந்தையில் திகழும் நிறுவனம் BGauss. நடப்பு செப்டம்பர் மாதம் இவர்கள் சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள இ ஸ்கூட்டர் இந்த BGauss RUV 350 ஆகும். வசீகரமான தோற்றத்துடன் எளிதில் கையாளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2.3 கிலோவாட் ரோபஸ்ட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
நகர்ப்புறத்திற்கும், கிராமப்புறத்திற்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 105 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இதன் விலை ( எக்ஸ் ஷோரூம்) ரூபாய் 1.19 லட்சம் ஆகும். மணிக்கு 75 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 3 வருடம் அல்லது 36 ஆயிரம் கிலோ மீட்டர் வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. சார்ஜ் ஏற்றுவதற்கு 2 மணி நேரம் 35 நிமிடங்கள் ஆகும். நவீன வசதிகளுடன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.
இந்த 3 ஸ்கூட்டர்களில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வாகனத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம். பயணிகளின் பாதுகாப்பு, அவர்களின் தேவை, பிக்கப், மைலேஜ் ஆகியவற்றை மனதில் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI