நடிகை கீர்த்தி பாண்டியனின் கண்ணகி படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அதுதொடர்பாக அவரது கணவரும், நடிகருமான அசோக் செல்வன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அஷோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன்


கோலிவுட்டின் இளம் திருமண ஜோடிகளாக வலம் வருகிறார்கள்  நடிகர் அஷோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியது. பல வருடங்களாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி திருமணம் ஆனது. இருவரும் சேர்ந்து அறிமுக இயக்குநர் ஜெய் இயக்கியிருக்கும் ப்ளு ஸ்டார் படத்தில் நடித்துள்ளார்கள். ஒருவருக்கு ஒருவர் துணை நின்று ஒருவரின் இருப்பை மற்றொருவர் கொண்டாடி வரும் இந்த தம்பதியினர் முதல் முறையாக களத்தில் மோத இருந்தார்கள். 






 கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஹாலினி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கண்ணகி.  இந்தப் படத்தை யஹ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வெற்றி, , மயில்சாமி,  மௌனிகா, ஆதேஷ் சுதாகர், யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவும் படத்தொகுப்பை சரத்குமார் கையாண்டுள்ளார்.


கார்த்திக் நேத்தா இப்படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ளார். ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இன்று தியேட்டரில் வெளியாக இருக்கும் கண்ணகி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. 


சபா நாயகன்


இப்படியான நிலையில்  நடிகர் அஷோக் செல்வன் நடித்து சபா நாயகன் படமும் இன்று வெளியாக இருந்தது. அறிமுக இயக்குநர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில், நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி நடித்திருக்கிறார்கள்.


மேலும் இப்படத்தில் மயில்சாமி, மைக்கேல் தங்கதுரை, உடுமலை ரவி, அருண் குமார், ஜெய்சீலன் சிவராம், ஸ்ரீராம் கிரிஷ், ஷெர்லின் சேத், வியாசாந்த், அக்சயா ஹரிஹரன், துளசி சிவமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  ஓ மை கடவுளே இப்படத்திற்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்துடன் இணைந்து அவரின் சீடர் தினேஷ் புருஷோத்தமன் மற்றும் பிரபு ராகவ் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கின்றனர். 


யாருக்கு வெற்றி?


திருமணத்திற்கு பின் இந்த ஜோடியினர் முதல் முறையாக நடிகர்களாக களத்தில் மோத இருந்த நிலையில் அசோக் செல்வன் படம் இன்று ரிலீசாகவில்லை. டிசம்பர் 22 ஆம் தேதி கதாநாயகன் படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் கண்ணகி படம் பற்றி நடிகர் அசோக் செல்வன் விமர்சனம் செய்துள்ளார். 


அதில், “கண்ணகி படம் ஒரு ‘ரத்தினக்கல்’ போன்றது. அப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படத்தை உருவாக்க படக்குழு நடத்திய போராட்டம் என்ன என்பது எனக்கு தெரியும். இதுபோன்ற படங்களை பார்வையாளர்கள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். அது இதுபோல படங்கள் உருவாக காரணமாக அமையும். கண்ணகி போன்ற ஒரு திரைப்படத்தை நம்புவதற்கும், ஆதரவளிப்பதற்கும் கீர்த்தி பாண்டியனுக்கு ஸ்பெஷலாக ஒரு ஹார்டினை பரிசளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.