ரெண்டுபேரும் நடிக்க கதை வந்துச்சு... உதயா அண்ணா என்ன பண்ணார் தெரியுமா? அருள்நிதி சீக்ரெட்..
"நான் உதயா அண்ணாக்கிட்ட சொல்லும்பொழுது அவரும் சிரிச்சுட்டாரு."

அரசியல் மற்றும் திரையுலக பின்னணி கொண்ட நடிகர் அருள்நிதி. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மூன்றவாது மகனின் வாரிசு. என்னதான் ஸ்ட்ராங்கான பின்னணி கொண்டவராக இருந்தாலும் அலப்பரை இல்லாமல் எல்லோருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள் . அருள்நிதி வம்சம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் . அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட , மௌனகுரு, டிமாண்டி காலனி, நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் , இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அவர் சில வருடங்களுக்கு முன்னர் அளித்த நேர்காணல் ஒன்றில் , தனது அண்ணனான உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் பந்தம் குறித்து பேசியிருக்கிறார் .
அதில் ”நான் கிரிக்கெட் ரொம்ப பார்ப்பேன். அதுக்கு அடிக்ட்..நான் உதயா அண்ணேன், துரை மூனு பேரும் எங்கள் நண்பர்களோட சேர்ந்து உதயா அண்ணன் வீட்டுல அண்டர் ஆர்ம்ஸ் கிரிக்கெட் விளையாடுவோம். 2008 ஆம் ஆண்டு வரையிலும் கிரிக்கெட் விளையாடிட்டுதான் இருந்தோம். நான் அப்போ காலேஜ் படிச்சுட்டு இருந்தேன். அதன் பிறகு எல்லோரும் வேலைக்கு போயிட்டாங்க. உதயா அண்ணனும் நடிக்க போயிட்டாரு.அதனாலதான் வாடிக்கையாக விளையாடுவது போல விளையாட முடிவதில்லை.பாண்டிச்சேரியில இருந்து கதை ஒன்னு பார்சல் வந்துச்சு. அதுல நானும் உதய் அண்ணாவும் இணைந்து நடிக்குற மாதிரியான கதையை எழுதியிருந்தாங்க.
ஆனால் அவர் எங்க இருவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்திருந்தார். அதை பார்த்தே எனக்கு கதையை படிக்க தோண்றவில்லை. நான் உதயா அண்ணாக்கிட்ட சொல்லும் பொழுது அவரும் சிரிச்சுட்டாரு. காலம் கைக்கூடினால் ஒன்றாக சேர்ந்து நடிப்போம். இரண்டு படங்களோட ஃபீல்ட் அவுட் ஆகிடுவேன்னு சொன்னாங்க. 11 படங்கள் வரையிலும் வந்துட்டேன். அதே போல காலம்தான் எல்லாமே “ என தனது பாணியில் பதிலளித்திருக்கிறார் அருள்நிதி.