நான் பேசுனா ரொம்ப ஓப்பனா பேசிருவேன் அதனால் தான் பொது இடங்களில் நான் அதிகம் வாய் திறப்பதில்லை என்று அருள்நிதி   கலகல பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். 


அரசியல் மற்றும் திரையுலக பின்னணி கொண்ட நடிகர் அருள்நிதி. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி  மூன்றவாது மகனின் வாரிசு. என்னதான் ஸ்ட்ராங்கான பின்னணி கொண்டவராக இருந்தாலும்  அலப்பரை இல்லாமல் எல்லோருடனும் எளிமையாக பழகக்கூடியவர் என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள் . அருள்நிதி வம்சம் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் . அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட , மௌனகுரு, டிமாண்டி காலனி, நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும் , இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்கள் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.


இந்நிலையில் இவர் நடிப்பில் லேட்டஸ்ட் ரிலீஸ் டைரி. உதயநிதி ஸ்டாலினின் "ரெட் ஜெயண்ட் மூவிஸ்" 2022ல் பல வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அருள்நிதியின் டைரி படத்தினையும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்தப் படத்தின் விழா நடந்தபோது மேடையில் அருள்நிதி பேசியதுதான் தற்போது மீண்டும் உலாவரத் தொடங்கியுள்ளது. “உண்மையில் வம்சம் படம் அண்ணனுக்கு வந்தது தான். அவர்தான் இல்லை இந்த கேரக்டருக்கு நான் செட்டாக மாட்டேன் என் தம்பி அருள்நிதியை வைத்துப் பண்ணுங்கள் என்று சொல்லி என்னை இயக்குநர் பாண்டிராஜுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அந்தப் படத்தின் ஆடியோ லாஞ்ச் தாத்தா தான் செய்தார். அந்த விழாவில் மொத்த குடும்பமும் இருந்தது. ஆனால் அண்ணன் உதய் மட்டும் இல்லை. எனக்கு ரொம்பவே அழுகையா வந்தது. ஆனால் அவர்தான் என்னை வளர்த்துவிட்டார். இன்னைக்கு நான் அவர் உள்பட பல பிரபலங்கள் இருக்கும் மேடையில் என் பட அறிமுகத்துக்காக நிற்பதில் ரொம்ப மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.


அப்படியே தொகுப்பாளினியாக நின்று கொண்டிருந்த டிடியைப் பார்த்து ஹேப்பியா என்று கேட்டார். அதற்கு டிடியும் நான் ஹேப்பி. ஆனா நீங்க பேசினதுல உங்க அண்ணன் தான் ரொம்ப ஹேப்பி. அவர் தான் பேசவைங்க பேசவைங்க என்று சொன்னார். நான் அவர்கிட்ட நானா சார் மாட்டேங்குறேன். அவர்தான் பேசமாட்டேங்குறார் என்றேன். இன்னிக்கு ஒருவழியா பேசிட்டீங்க என்றார்.


அதற்கு அருள்நிதி ”நான் பேச ஆரம்பிச்சா ரொம்ப ஓப்பனா பேசுவேன். அதான் பேசுறதே இல்லை” என்றார். அதற்கு டிடி அப்ப உடனே முடிச்சிடுவோம் என்று சொல்ல. அந்த உரையாடல் முடிந்தது.





;