Watch Video: மருமகன் உமாபதிக்கு முத்தம்.. மகள் ஐஸ்வர்யாவுக்கு உணர்ச்சிகர மெசேஜ்.. அர்ஜூன் நெகிழ்ச்சி வீடியோ!

அர்ஜூன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதியை வாழ்த்தி உணர்ச்சிகரமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமய்யா மகன் உமாபதி இருவருக்கும் கடந்த ஜூன் 10ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

Continues below advertisement

காதல் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா - உமாபதி தம்பதிக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர். அர்ஜூன் பங்குபெற்ற பிரபல ஆக்‌ஷன் நிகழ்ச்சியான சர்வைவர் எனும் ஜூ தமிழ் சேனலில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் உமாபதி - மற்றும் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலில் விழுந்ததாகத் தகவல்கள் பரவின.  தொடர்ந்து சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்று இவர்களது காதல் உறுதிப்படுத்தப்பட்டது. 

இதனிடையே ஐஸ்வர்யா - உமாபதியின் ப்ரீ வெட்டிங், ஹல்தி புகைப்படங்கள் சென்ற வாரம் வைரலான நிலையில், ஜூன் 10ஆம் தேதி காஞ்சிபுரம், கெருகம்பாக்கம் ஆஞ்சநேயர் கோயிலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. முன்னதாக இவர்களது திருமணப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், அர்ஜூன் தன் சமூக வலைதளப் பக்கத்தில் மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் உமாபதியை வாழ்த்தி உணர்ச்சிகரமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

“எங்களின் அன்பு மகள் ஐஸ்வர்யா தன் வாழ்வின் காதலான உமாபதியை திருமணம் செய்து கொண்டதைப் பார்த்து நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  காதல், சிரிப்பு, மற்றும் மறக்க முடியாத நினைவுகள் நிறைந்த நாள் அது. இந்தப் புதிய அத்தியாயத்தில் நீங்கள் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கும்போது, ​​எங்கள் இதயங்கள் பெருமையாகவும் உணர்ச்சிகரமாகவும் மாறியுள்ளது.

இதோ உங்கள் வாழ்நாள் முழுவதுக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்கள், அன்பு, மகிழ்ச்சியோடு இருங்கள்.  நீங்கள் பகிர்ந்து கொள்ளும் அன்பைப் போலவே உங்கள் பயணமும் அழகாக இருக்கட்டும். நாங்கள் உங்கள் இருவரையும் மனதார நேசிக்கிறோம்!” என உணர்ச்சிகரமாகப் பதிவிட்டுள்ளார்.

 

அர்ஜூனின் இந்தப் பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.

மேலும் படிக்க: Actor Darshan : கொலை வழக்கில் சிக்கிய கன்னட நடிகர்..7 நாட்கள் காவல்துறை கண்காணிப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!

Continues below advertisement