ராமர் கோயில் குடமுழுக்கு


அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை,  இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள இந்துக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். கடந்த 18ம் தேதி கருங்கல்லில்  செய்யப்பட்ட 51 அங்குல குழந்தை ராமர் சிலை துணியால் மூடப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. மைசூரை சேர்ந்த அருண் யோகிராஜ் என்பவரால் செதுக்கப்பட்ட சிலையின் கண்கள், குடமுழுக்கிற்கான முகூர்த்த நாளான ஜனவரி 22ம் தேதி மதியம் 12.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது.  முழுவதும் பளிங்கு கற்களால் ஆன தரை, கோயில் தூண்கள் வண்ண வண்ண மலர்களால் இந்த கோயில் அலங்கரிக்கப் பட்டுள்ளது. 


இந்த விழாவில் இந்திய திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியாத நடிகர்கள் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலமாக பதிவு செய்து வருகிறார்கள். அந்த வகையில்  நடிகர் அர்ஜூன் ராமர் கோயில் குடமுழுக்கு தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.


மோடிக்கு நன்றி தெரிவித்த அர்ஜூன்






2024  ஜனவரி 22 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான நாள். பல நூற்றாண்டுகளாக நமது தலைவர் மற்றும் சாமானிய மக்களின் போராட்டின் மகத்துவத்தை இந்த நாளில் நாம் நினைவு கூறுவோம். எந்த விதமான அரசாங்கமும் மீடியாவும் இல்லாதபோது ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தபோது நம் மக்கள் இந்த மகத்தான போராட்டத்தை கைவிட வில்லை. கடந்த 500 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது உயிரை தியாகம் செய்திருக்கிறார்கள். இவர்களின் நாட்டிற்காக தங்களது உயிரைக் கொடுத்த மக்களின் தியாகம் வீணாகவில்லை. இந்த போராட்டத்தில் பங்கெடுத்த இந்த நாட்டு குடிமக்களுக்கு எந்த வித மத வேறுபாடும் இன்றி நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் . கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நீங்கள் நினைவாக்கி இருக்கிறீகள். ஜெய் ஹிந்த். ‘ என்று அர்ஜூன் தெரிவித்துள்ளார்.


விடாமுயற்சி


தற்போது நடிகர் அர்ஜூன் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்காக துபாயில் உள்ளார். மகிழ் திருமேணி இயக்கத்தில் அஜித் குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் த்ரிஷா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.




மேலும் படிக்க : Ayodhya Ram mandir: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு : உங்கள் வீட்டில் ராமர் பூஜை செய்வது எப்படி?


Sithara : வடிவேலுவுடன் ஜோடி சேரும் 90'ஸ் ஹீரோயின்... பல ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளித்திரையில் ரீ என்ட்ரி