தமிழ் சினிமாவில் ஒரு நகைச்சுவை நடிகராக தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர் வைகை புயல் வடிவேலு. குணச்சித்திர நடிகராகவும் தன்னை நிரூபித்த வடிவேலு சில காலம் படங்களில் நடிக்காமல் விலகி இருந்தார். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மூலம் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி கொடுத்த பிறகு சந்திரமுகி 2, மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார். 

Continues below advertisement


கம்பேக் கொடுத்த மாமன்னன் :


வடிவேல், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான 'மாமன்னன்' படத்தில் மிகவும் வித்தியாசமாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் வடிவேலு. அவரின் நடிப்பு பாராட்டுகளை பெற்று கொடுத்ததோடு அது அவருக்கு சிறந்த கம்பேக் படமாகவும் அமைந்தது. 


 




மாமன்னன் படத்தை தொடர்ந்து வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசில் இருவரும் இணைந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு முழு நீள காமெடி ஜனார் கொண்ட படத்தில் நடிக்க உள்ளனர் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. 


ரீ என்ட்ரி கொடுக்கும் சித்தாரா :



90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக புதுப்புது அர்த்தங்கள், புது வசந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வந்த நடிகை சித்தாரா சில காலம் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்த சித்தாரா, சன் டிவியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்து வருகிறார். தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்க இருக்கும் சித்தாரா, நடிகர் வடிவேலுவின் ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 


ஜாலியான படம் :


சித்தாரா - வடிவேலு இணைந்து நடிக்கும் படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்க உள்ளார் என்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மிகவும் ஜாலியான என்டர்டெயின்மென்ட் படமாக இது உருவாக உள்ளது. இப்படம் மூலம் நடிகை சித்தாராவை அடுத்தடுத்த படங்களில் காணமுடியும் என்ற எதிர்பார்ப்பு அவரின் தீவிர ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 



திருமணமாகாத சித்தாரா :


தமிழ் சினிமாவில் திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் ஏராளமான நடிகைகளில் சித்தாராவும் ஒருவர். தன்னுடைய தாய் தந்தை மீது அளவு கடந்த பாசமும் அன்பும் இருப்பதுதான் அவர் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணமாக கூறப்பட்டாலும் அவருக்கு ஏற்பட்ட காதல் தோல்விதான் அவர் இந்த முடிவு எடுத்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது.