அர்ஜூன் தாஸ் - அதிதி ஷங்கர்

வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது கதை நாயகனாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் அர்ஜூன் தாஸ். வசந்தபாலன் இயக்கிய அநீதி பிஜாய் நம்பியார் இயக்கிய போர் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார் அர்ஜூன் தாஸ் .தொடர்ந்து சமீபத்தில் சாந்தகுமார் இயக்கத்தில் இவர் நடித்த ரசவாதி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

Continues below advertisement

Continues below advertisement

அதேபோல் இயக்குநர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் கார்த்தி நடித்த விருமண் படத்தில் மூலம் திரைக்கு அறிமுகமானார். கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் அதிதி  நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வரத் தொடங்கின. தற்போது விஷ்ணு வர்தன் இயக்கியுள்ள நேசிப்பாயா படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நாயகனாக நடித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தற்போது அதிதி ஷங்கர் உடன் புது படம் ஒன்றில் இணைந்துள்ளார் அர்ஜூன் தாஸ். இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்குகிறார். 

விக்னேஷ் ஸ்ரீகாந்த்

இயக்குநர் பிஜாய் நம்பியாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். சமீபத்தில் வெளியான போர் திரைப்படத்தில் தமிழுக்கு வசனங்கள் எழுதினார். ராதா ரகசியம் , அனுபவம் புதுமை , விழிகளின் அருகினில் வானம் , இன்னெக்கு வேணாம் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். வைசாக் இசையில் வெளியான ரேண்ட் , ஹிப்ஹாப் தமிழாவின் வீரன் , பிடி சார் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.

சமீபத்தில் டிரெண்டாகி வரும் அரண்மனை 4 படத்தின் ‘அச்சச்சோ’ பாடல் இவர் எழுதியது. இது தவிர்த்து கவினின் ஸ்டார் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார். 

காதல் கதையில் அர்ஜூன் தாஸ் அதிதி ஷங்கர்

காதலை மையப்படுத்திய கதையாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் துவங்கியுள்ளது. அரவிந்த் விஸ்வநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.