2024 ஆம் ஆண்டில் மிகப்பெரிய பேரழிவுகள் உலகளவில் காத்திருப்பதாக நடிகர் அனுமோகன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இயக்குநர், நகைச்சுவை நடிகர் என பன்முகம் கொண்ட அனுமோகன் பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தாலும் இந்து மதத்தின் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டவர். இவர் ஏராளமான விஷயங்களை  யூட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் தெரிவித்துள்ளார். 


அதில், “சித்தர் ஏடுகளில் இயற்கை பேரிடர் பற்றி படித்த விஷயத்தை தான் நான் தெரிவித்திருந்தேன். அந்த காலத்திலேயே அவர்கள் அப்படி எழுதி வைத்திருந்தார்கள். பொதுவாக பஞ்ச பூதங்கள் தான் கடவுள். அதை பல ரூபங்களில் வழிபடுவதுதான் மதங்களின் வழக்கம். சூரிய நமஸ்காரம் மட்டும் பண்ணக்கூடாது. பிற பஞ்ச பூதங்களையும் நாம் மதிக்க வேண்டும். 


வெயிலின் தாக்கம் இப்போது இருப்பது எல்லாம் கம்மி தான். இன்னும் நிறைய இருக்கிறது. இனிவரும் காலங்களில் சூரியனில் இருந்து வரும் நெருப்பின் பவர் அதிகமாக இருக்கும். சாலையில் கிடக்கும் சாதாரண பேப்பர் கூட எரியும். 2024ல் உலகளவில் பேரழிவு உண்டு. நான் இதெல்லாம் நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். 


சித்தர் ஏடுகளில் இந்திய வரைபடத்தில் இலங்கை நாடு நீரில் மூழ்கும் என சொல்லியிருக்கிறார்கள். அரபிக்கடல், வங்கக்கடல், இந்திய பெருங்கடல் சேர்ந்து பொங்கும் என சொல்லியிருக்கிறது. விபத்து ஏற்பட்டால் உயிர்சேதம் வேண்டாம் என்பது தான் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். எதிர்காலத்தில் ஒரு தக்காளிக்கு 100 பேர் அடித்துக் கொள்வோம் என இருக்கிறது. விவசாயத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். அதனை பெருக்கினால் மட்டுமே ஒரு நாடு முன்னேறும். விவசாயத்துக்கு மரியாதை கொடுப்பதை விட்டு விட்டோம். 


நான் பள்ளிக்கு செல்லும் ஒன்றரை கிலோ மீட்டருக்கு என் மீது வெயில் படாமல் சென்று வந்திருக்கிறேன். இப்போது 6 வழி சாலை போடுறேன்னு எல்லாத்தையும் வெட்டி விட்டார்கள். எல்லாரும் மரத்தை வெட்டுவதில் தான் குறியாக இருக்கிறார்கள். நம்ம செய்யும் தவறை இயற்கையால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அதான் அதனுடைய தாக்கத்தை காட்டுகிறது. 


200 வருடங்களுக்கு முன்னாடி நீங்கள் காக்காவுக்கு சோறு வைத்திருந்தால் அது இன்றைக்கும் உங்களை பார்த்தால் கண்டுபிடிக்கும். காக்காவுக்கு இயற்கை மரணம் என்ற ஒன்றே கிடையாது. ஏதாவது அடிபட்டு தான் இறந்திருக்கும். காகத்தை விட சுத்தமான பறவை எதுவும் கிடையாது. எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் காகத்துக்கு தான் உண்டு. அரசியல்வாதிகளும், அரசாங்கமும் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என அனுமோகன் தெரிவித்துள்ளார்.