BCCI On New Toss Rule: இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விரைவில் பல புதிய மாற்றங்கள் நிகழ இருக்கிறது. ஏற்கனவே, ஐபிஎல்லில் புதிதாக இம்பேக்ட் விதி ஒன்று அறிமுகப்பட்டு அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த விதியை அறிமுகம் செய்ததுதான் பிசிசிஐதான்.  அந்தவகையில், பிசிசிஐ உள்நாட்டு கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறையை நீக்க பரிசீலித்து வருகிறது. 


நீக்க காரணம் என்ன..?


கிரிக்கெட்டில் டாஸ் என்பது முக்கிய பங்கு வகிக்கும். பெரும்பாலும் எந்த போட்டியிலும், டாஸ் வென்ற அணி அங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப, பேட்டிங்கையோ, பந்துவீச்சை தேர்வு செய்து போட்டியில் ஆதிக்கம் செலுத்தும். அதிலும் குறிப்பாக டெஸ்ட் மற்றும் டி20போட்டிகளில் இது அதிகமாக நடக்கிறது. இதையடுத்து, இதனால்தான் பல வருடங்களாக டாஸ் போடும் விதிய ரத்து செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக, இதை உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 


இது எப்படி சாத்தியம்..? 


போட்டியின் தொடக்கத்தில் டாஸ் போடுவதற்கு பதிலாக, பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை தேர்வு செய்யும் உரிமை சொந்த மண்ணில் விளையாடும் அணிக்கு பதிலாக, வெளியூரில் இருந்து வருகை தரும் அணிக்கு தரப்படும். அதன்படி, வருகை தரும் அணி டாஸ் இல்லாமல் முதலில் பந்துவீச்சு அல்லது பேட்டிங் செய்ய முடிவு செய்யலாம். மேலும், இந்த விதிகளை சிகே நாயுடு டிராபியில் இருந்து அமல்படுத்தலாம் என நம்பப்படுகிறது. 


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, உள்நாட்டு கிரிக்கெட்டில் மாற்றங்களுக்கான பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளார். அதில், இந்த டாஸ் நீக்கும் முடிவும் உள்ளது. 23 வயதுக்குட்பட்டோருக்கான சிகே நாயுடு வடிவ போட்டியிலிருந்து டாஸை ரத்து செய்ய ஜெய் ஷா பிசிசிஐ குழுவிற்கு முன்மொழிந்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா பேசுகையில், “ சிகே நாயுடு டிராபியில் இருந்து டாஸ் ரத்து செய்யப்படும். வருகை தரும் அணிக்கு முதலில் பேட்டிங் செய்ய வேண்டுமா அல்லது பந்து வீச வேண்டுமா என்பதை முடிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்படும்” என்றாஎ. 


ஐபிஎல்லில் நீக்கப்படுகிறதா டாஸ் போடும் முறை..? 


உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் நீண்ட காலமாக டாஸை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றன. சிகே நாயுடு போட்டியில் இது வெற்றியடைந்தால், பிசிசிஐ எதிர்காலத்தில் ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி, ஐபிஎல் உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தலாம். பிசிசிஐ ஐபிஎல்லில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு உள்நாட்டு போட்டிகளில் ஏதேனும் புதிய விதியை முயற்சித்து வருகிறது. 


இரண்டு போட்டிகளுக்கு நடுவே நீண்ட இடைவெளி: 


இந்த விதிகளை தவிர, சில வாரங்களுக்கு முன்பு இந்திய ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் புகார் செய்திருந்த திட்டத்தையும் ஜெய் ஷா முன்வைத்துள்ளார். கடந்த ரஞ்சி டிராபி சீசனில் அரையிறுதிக்குப் பிறகு, போட்டிகளுக்கு இடையே போதுமான இடைவெளி இருக்க வேண்டும் என்று மும்பை அணிக்காக விளையாடிய ஷர்துல் தாக்கூர் கூறியதை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. அடுத்த சீசனில் இருந்து போட்டிகளுக்கு இடையே அதிக நேரம் இருக்கும், இதனால் வீரர்கள் தங்கள் முழுத் திறனுடன் விளையாட முடியும் என்று ஜெய் ஷா கூறினார்.