பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் அஜ்மல் அமீர்
தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருபவர் நடிகர் அஜ்மல் அமீர். தமிழில் 2005 ஆம் ஆண்டு வெளியான பிப்ரவரி 14 படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மிஸ்கின் இயக்கிய அஞ்சாதே , விஜயின் தி கோட் , கோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அக்யூஸ்ட் படம் வெளியானது.
தற்போது இவர் பெண்ணொருவரிடம் தகாத முறையில் பேசிய ஆடியோ க்ளிப் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுக்கு தந்தையான அஜ்மல் இன்ஸ்டாகிராமில் பல்வேறு பெண்களும் தகாத பேச்சில் ஈடுபட்டுள்ளது பல்வேறு ஸ்கிரீன் ஷாட்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு கணக்கில் இருந்து பகிரப்பட்டு வருகின்றன. அதில் அஜ்மலின் குரலைப் போல் ஒருவர் பெண்களுடன் உரையாடலில் ஈடுபடுகிறார், அதில் அவர் அந்த பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, உறவு நிலை மற்றும் உடல் விருப்பங்கள் போன்ற தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார், அதே நேரத்தில் துன்புறுத்துவதாக உணர வைக்கும் கருத்துக்களைத் தெரிவிக்கிறார். மறுபக்கத்திலிருந்து வெளிப்படையான அசௌகரியம் இருந்தபோதிலும், அவர் ஆசை வார்த்தைகளை தொடர்கிறார். இந்த ஆடியோ மற்றும் ஸ்கிரின்ஷாட்களின் உண்மைத் தன்மை முழுவதுமாக விசாரிக்கப்பட்ட பின்பே அவை உண்மையாகவே அஜ்மலுடையதா என்பது தெரியவரும் . அவை போலியாக குற்றசுமத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு திட்டமிட்டு பரப்பப்படுபவையாகவும் இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.